புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2013

வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே: ஐ.தே.க
வடக்கில் வாழுகின்ற தமிழர்களும் அரசியல் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க  வழியேற்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் சாந்தினி
கோன்காகே தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும் இலங்கையர்களே. வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி அவர்களும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வழியேற்படுத்த வேண்டும்.
அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் இடம்பெறும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியிலுள்ள சிலர் அதனை தடுத்து நிறுத்த பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
வடக்கில் உள்ள மக்கள் சுதந்திரமான தேர்தல் இடம்பெற்று தமக்கு ஜனநாயக உரிமை கிடைக்காதா என ஆவலாய் உள்ளனர்.
அரசாங்கத்தில் உள்ள பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் நாட்டில் சுதந்திரமாக உரிமைகளை அனுபவித்து வாழ முடியும் என்றால் ஏன் வடக்கில் வாழும் சாதாரண பொதுமக்கள் சுதந்திரமாக வாழக் கூடாது.
ஏனைய மாகாண மக்கள் அனுபவிக்கும் சுததந்திரமும் உரிமைகளும் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே, அரசாங்கம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad