புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

திருமுறிகண்டியில் “போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்” என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட திருமுறிகண்டி பகுதியில் இரண விரு ஹம்பான( போர் வீரர்களுக்கான வீட்டுத்திட்டம்) என்ற பெயரில் சுமார் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டப் பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தின் பின்னர் திருமுறிகண்டி, சாந்தபுரம், போன்ற கிராமங்களை ஆக்கிரமித்திருந்த படையினர் இரணைமடு குளத்தினை அடிப்படையாகக் கொண்டு குறித்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றத்தை உருவாக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அந்த முயற்சிகள் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களால் முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏ-9 வீதிக்கு இடது புறமுள்ள அம்பகாமம் பிரதேசத்திற்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 4 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்காக சுமார் ஆயிரம் வீடுகள் சீனா நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இவ்விடயம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கோ, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கோ எவ்விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
ஆனால் 2012ம் ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த பகுதியிலுள்ள வனவளத்துறைக்குச் சொந்தமான நிலத்தை தமக்கு வழங்குமாறு இராணுவம் கேட்டிருந்தது.
அதற்குச் சட்டரீதியான அனுமதி எதுவும் வழங்கப்படாத நிலையில் குறித்த வீடுகள் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுமுள்ளது.
மேலும் இந்தப் பகுதிக்குள் அனுமதியில்லாமல் யாரும் நுழைய கூடாதெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனோடு காப்பெற் வீதிகளும் இப்பகுதியில் துரிதமாக அமைக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.

ad

ad