புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு திமுக வரக்கூடாது :
 : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
மதுரை மேலமாசி வீதி- தெற்கு மாசி வீதி சந்திப்பில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தெய்வநாயகம் தலைமை தாங்கினார்.


பொதுச்செயலாளர் அண்ண பூர்ணா தங்கராஜ், மாநில செயலாளர் ராம்பாபு, தெற்கு மாவட்ட தலைவர் தேவராஜன், துணைத்தலைவர் கே.எஸ்.கே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.
அவர்,  ‘’இந்தியாவை வழி நடத்திய இளம் தலைவர் ராஜீவ்காந்தி இந்திய தேசம் அவரால் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்றது. அந்த இளம் தலைவரின் மரணம் இயற்கையானது அல்ல. செயற்கையாக தீவிரவாதிகளால் அவர் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார். மகாத்மா காந்தி, இந்திரா காந்தி வரிசையில் ராஜீவ்காந்தியும் நாட்டுக்காக உயிரை இழந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் தான் நாட்டுக்காக தனது உயிரை தந்தவர்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள தலைவர்களை பற்றி அனைவருக்கும் தெரியும். காங்கிரசில் உள்ள தலைவர்கள் மட்டும்தான் மக்களுக்காக உயிரை கொடுப்பவர்கள். தமிழகத்தில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது என்று சொல்கிறார்கள்.
1938-67 வரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே இயக்கம் காங்கிரஸ். 1967-ல் தி.மு.க. ஆட்சியை எப்படி பிடித்தது. காங்கிரசுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் சேர்த்து கொண்டு காங்கிரசை தோற்கடித்தனர். இன்றைக்கும் அ.தி.மு.க, தி.மு.க. தனித்து நின்று ஆட்சியை பிடிக்க முடிய வில்லை. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான்.
இங்கே பேசிய நிர்வாகிகள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம். நாம் தனித்து நிற்க வேண்டும் என்றார்கள். எனது கருத்தும் அதுதான். அதில் தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க. தயவு இன்றி புதிய கூட்டணியை காங்கிரஸ் உருவாக்க வேண்டும்.
8 1/2 ஆண்டுகள் மத்தியில் பதவி சுகம் அனுபவித்த ஒரு கட்சி இப்போது விலகி விட்டது. அது எங்களுக்கு மகிழ்ச்சிதான். விலகியது விலகியதாக இருக்கட்டும். இனிமேல் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கு தி.மு.க. வரக்கூடாது.
தமிழ் ஈழம் என்று தமிழகத்தில் பேசும் சிலர் இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன? மத்திய அரசு ரூ.48 ஆயிரம் கோடி மதிப்புள்ள நல உதவிகளை இலங்கை தமிழர்களுக்கு செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள வைகோ, சீமான் போன்றவர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு கூட எந்த நன்மையும் செய்யாதவர்கள். ஆனால் இங்கே பேசி, பேசி இலங்கையில் உள்ள தமிழர்களை வேதனைப் படுத்தி வருகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினைகள் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பேசுவது வேடிக்கையாக உள்ளது. மத்தியில் காங்கிரஸ் கட்சி தான் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக பெரும்பாண்மையை காங்கிரஸ் பெற்று இளம் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வருவார். அதற்கு தமிழகம் உதவிக்கரமாக இருக்கும்’’என்று பேசினார்.

ad

ad