புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான் : வைரமுத்து
மக்கள் மேம்பாட்டுக்காக எழுதுகோலைப் பயன்படுத்தியவர் திமுக தலைவர் கலைஞர் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.


திமுக தலைவர் கலைஞரின் 90-வது பிறந்தநாளையொட்டி, கலைஞர் - 90 பெருங்காவியத்தின் வரலாறு என்ற தலைப்பில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் 10 நாள்கள் தொடர் நிகழ்ச்சி நடத்துகிறார். முதல் நாளான இன்று காமராஜர் அரங்கத்தில் முத்தமிழ் கருத்தரங்கம் நடந்தது.


கவிஞர் வைரமுத்து தலைமை வகித்தார். இந்தக் கருத்தரங்கை பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கருணாநிதி கேட்டார்.அப்போது வைரமுத்து பேசியபோது,
’’இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான்.  மொழி என்ற கருவி ஒரு காலத்தில் வழிபாட்டுக்காகவும், உணர்வுகளுக்காககவும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் திராவிட இயக்கம் வந்த பிறகுதான் மொழி போர்க்கருவியாக மாறியது.அடக்கப்பட்ட மக்களை மேம்படுத்த கலைஞர் தனது எழுதுகோலால் மொழியை கருவியாகப் பயன்படுத்தினார். சுவாசம் இருக்கும் வரை இதயம் இயங்கும்.பூமி சுற்றும் வரை ஈர்ப்பு இருக்கும். அதுவரை கருணாநிதி தடம் பதிப்பார்’’ என்றார் வைரமுத்து.
இயல் தமிழ் என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், இசை தமிழ் என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி, தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் அருள்மொழி ஆகியோர் பேசினர்.கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்பட பங்கேற்றனர்.

ad

ad