புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூன், 2013

 தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்தநாளையொட்டி 'கலைஞர் 90 பெருங்காவியத்தின் வரலாறு' என்ற தலைப்பில் 10 நாட்கள் தொடர் நிகழ்ச்சி தொடங்கியது.
முதல் நாளான இன்று காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார். இயல் தமிழ் என்ற தலைப்பில் சுப.வீரபாண்டியன்,
இசை தமிழ் என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி, தமிழ் என்ற தலைப்பில் கவிஞர் அருள்மொழி ஆகியோர் பேசினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கருத்தரங்கை பார்த்தார்.


கவிஞர் வைரமுத்து பேசுகையில், ''இந்தியாவில் ஆளும்திறன் உள்ள ஒரே தலைவர் கலைஞர்தான். ஆட்சியில் இல்லாதபோதும், இங்கு திரண்டு இருக்கின்ற கூட்டம்தான் உண்மையான கூட்டம். திராவிட இயக்கம் வந்த பிறகுதான் மொழி போர்க்கருவியாக மாறியது. அடக்கப்பட்ட மக்களை மேம்படுத்த கலைஞர் தனது எழுதுகோலால் மொழியை பயன்படுத்தினார். சுவாசம் இருக்கும் வரை இதயம் இயங்கும். பூமி சுற்றும் வரை ஈர்ப்பு இருக்கும். அதுவரை கலைஞர் தடம் பதித்திருப்பார். மனநலத்தோடும், உடல் வலிமையோடும், தமிழ் வளத்தோடும், நூற்றாண்டுகளை கடந்தும் அவர் வாழ வேண்டும்'' என்றார்

முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம் பேசும்போது, கலைஞர் பிறந்த நாளையொட்டி நாளை முதல் 10ஆம் தேதி வரை சென்னையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டினால் தங்கமோதிரம் வழங்கப்படும். மேலும் 'வரலாறாய் வாழ்பவர்' என்ற தலைப்பில் கவிதை போட்டிக்கு ஏராளமான கவிதைகள் வந்துள்ளன. முதல் 3 இடங்களை பிடிக்கும் கவிதைகளுக்கு ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்'' என்றார்.

முன்னதாக கவிஞர் சொற்கோ கருணாநிதி எழுதிய, கருணாநிதி பற்றி வாழ்த்து பாடல்களை வடிவேல் கணேஷ் குழுவினர் பாடினார்கள்.

ad

ad