புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூன், 2013


டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஜூன்  17-ம் தேதி கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் தலைமை தாங்கினார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்திரராசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக அதன் தேசிய செயலாளர் து.ராஜா முடிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் து.ராஜாவை மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரித்து வாக்களிப்பது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானிக்கிறது என்று கூட்டததில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக  ஞாயிற்றுக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஅலுவலத்துக்கு சென்று டி,ராஜா ஆதரவு கோரினார்,

ad

ad