புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013

நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தல்களில் தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 189 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் இதில் மிகவும் கூடுதலான முறைப்பாடுகள் மத்திய மாகாணத்திலேயே பதிவாகியிருப்பதாகவும் கபே அமைப்பு தெரிவிக்கிறது. 
‘கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இதுதொடர்பில் தகவல் தருகையில்;-


மிகப்பாரிய அளவில் மாத்தளை மாவட்டத்திலேயே அரச சொத்துகள் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், காணி, காணி அபிவிருத்தி, அமைச்சு, கல்வி அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு ஆகியவற்றின் ஏராளமான வாகனங்கள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் அமைச்சின் கீழியங்கும் பல அமைப்புகளுக்கும் சொந்தமான ஏராளமான வாகனங்கள் மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஓடுவதை சர்வ சாதாரணமாக காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி வேட்பாளர்களின் உற்றார், உறவினர், சகோதரர்கள், சொந்த பந்தங்கள் ஆகிய அனைவருமே இப்போது அரச வாகனங்களை தமது சொந்த சொத்துகளைப்போல பாவித்து வருகின்றனர். பல வேலைத்திட்டங்களுக்காக என்று கூறியே இவ்வாறு அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

தமது சொந்த பணத்திலிருந்து சாராய போத்தல்களை விநியோகித்துவரும் ஆளும் கட்சிப் பிரமுகர்களையும் மாத்தளை மாவட்டத்தில் காணக்கூடியதாக விருக்கிறது. குருணாகல்,நிக்கவெரட்டிய, அட்டன் கொட்டகல போன்று இன்னும் சில தினங்களிலேயே மாத்தளை மாவட்டத்திலும் மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதே தென்படுகின்றன. மேடைகளில் அள்ளி வீசப்படும் தகாத வார்த்தைகளே இப்பகுதியில் தீ மூட்டும் நிலைமையை ஏற்படுத்தக்கூடியதாகவிருக்கிறது.

தேர்தல் நடைபெறுவத்கு இன்னும் நான்கு வாரங்கள் இருக்கும் போதே தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பறித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. மாத்தளை மாவட்டத்தில் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம மற்றும் எல்கடுவ பிளாண்டேஷன் ஆகிய அரச கட்டுப்பாட்டிலுள்ள தோட்டங்களே இருக்கின்றன.அங்குள்ள தோட்ட முகாமையாளர்களில் 99 சதவீதமானவர்கள் ஆளும் கட்சி அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் தொழிலுக்கு வந்தவர்கள் என்பதால் தோட்டங்களிலுள்ள சொத்துகளைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் வாக்குகளை சூறையாடும் நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றன.அரசியல்வாதிகளின் வரவு-செலவுத்திட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதி அனைத்துமே இப்போதுதேர்தல் செலவினங்களுக்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையாளரும் பொலிஸாரும் தொடர்ந்தும் கண்டும் காணாததுபோல இருந்துவந்தால் நிலைமை கட்டுப்பாட்டை மீறக்கூடிய அபாயம் இருக்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ad

ad