புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013


புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் குடும்பத்துடன் கைது

தமிழக கடற்றொழிலாளர்களை தடுத்து வைப்பதை நியாயப்படுத்தவும், இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கும் முகமாகவும், இந்திய மீனவர்கள் போல், இலங்கையின் வடக்கு
கடற்பரப்பிற்குள் சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களான கணவன், மனைவி மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகளை கடற்படையினர் நேற்று கைதுசெய்து, அவர்களை தலைமன்னார் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
காவற்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இவர்களிடம் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய இந்த கணவனும் மனைவியுடம் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து, அங்கு அகதி முகாம் ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர் எனவும் சிறீலங்கா தரப்பின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இந்தியாவுக்கு சென்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பலர் மீனவர்களை போல் மீண்டும் இலங்கைக்குள் வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என சிங்கள இனவாத பத்திரிகையான திவயின கூறியுள்ளது.
இந்தியாவில் அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் புலிகளின் உறுப்பினர்கள் பலர், மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கான மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி இவ்வாறு இலங்கைக்குள் வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இது சிறீலங்கா அரசிக் திட்டமிட்ட பொய்ப்பிரசாரம் என தமிழக தரப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

ad

ad