புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013

3வது முறையாக தே.பா.சட்டத்தின் கீழ் ஜெ.குரு கைது: சென்னை ஐகோர்ட்டில் பாமக வழக்கு: பிற்பகலில் விசாரணை
பா.ம.க. எம்.எல்.ஏ., ஜெ.குரு மூன்றாவது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து பாமக
சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. 
கடந்த மே 10ஆம் தேதி ஜெ.குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. 
இந்தநிலையில் குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் 3.7.2013ல் உத்தரவிட்டார். இதனை ரத்து செய்யுமாறு குரு தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதற்கான முறையான ஆணையும் வியாழக்கிழமை மாலை சிறைத்துறை நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், ஜெ.குரு  3வது முறையாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை கண்டித்துள்ள பாமக, வெள்ளிக்கிழமை காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது. பாமக சட்டப் பாதுகாப்புக் குழு தலைவர் பாலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் தனபாலன், செல்வம் தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு, பிற்பகல் விசாரணைக்கு வரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ad

ad