புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013


தே.மு.தி.க. துணை பொது செயலாளர் கட்சியில் இருந்து விலகல்!
தே.மு.தி.க. துணை பொது செயலாளர் ஆஸ்டின் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் அ.தி.மு.க. அல்லது காங்கிரசில் இணையலாம் என்று தெரிகிறது.


தே.மு.தி.க. மாநில துணை செயலாளராக இருப்பவர் ஆஸ்டின். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் குமரி மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் பதவியையும் வகித்து வந்தார்.  2009–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 
இவரது தோல்விக்கு உள்கட்சி பூசலே காரணம் என்று அப்போதே பரபரப்பு கிளம்பியது. இருந்தாலும் மாநில பொறுப்புக்கு நியமிக்கப்பட்டதால் ஆஸ்டின் தொடர்ந்து கட்சி பணியாற்றி வந்தார்.
குமரி மாவட்ட தே.மு.தி.க.வில் இவர் சில நடவடிக்கைகளை எடுத்து கட்சியில் இருந்து சிலரை நீக்கினார். அவர்கள் சமீபத்தில் மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்பட்டனர். இவரால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜெகன்நாதன் என்பவருக்கு, தற்போது குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 
இதனால் ஆஸ்டினுக்கும், கட்சி மேலிடத்துக்கும் இடையே பிரசனை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் அவர் கட்சியின் சென்னை பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கட்சியிலிருந்து விலகும் கடிதத்தை தே.மு.தி.க. அலுவலகத்தில் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
ஆஸ்டின் ஆரம்பத்தில் அ.தி.மு.க.வில் இருந்தபோது மேல்சபை எம்.பி.யாக பதவி வகித்தார். அதன்பிறகு 1997–ல் திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 2001–ல் நடந்த தேர்தலில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
திருநாவுக்கரசு கட்சியை கலைத்து விட்டு பாரதீய ஜனதாவுக்கு சென்றதால் ஆஸ்டின் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். 2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் தொகுதிக்கு சீட் கேட்டார். அது கிடைக்காததால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்
அதன்பிறகு விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கியதும் ஆஸ்டின் அதில் இணைந்து பணியாற்றி வந்தார்.

ad

ad