புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2013


மெட்ராஸ் கபே படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுப்பு
‘மெட்ராஸ் கபே’ படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் மறுத்து விட்டனர். இதனால் திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இப்படம் 3–ந் தேதி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

இந்தியில் தயாரான மெட்ராஸ் கபே’ படத்தை தமிழிலும் டப்பிங் செய்துள்ளனர். தமிழ் பதிப்புக்கு தணிக்கை குழுவினர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. மெட்ராஸ் கபே படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக தமிழ் அமைப்பினர் எதிர்த்தனர்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் மெட்ராஸ் கபே படத்துக்கு தடை விதிக்க கோரி வக்கீல் பி.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் ராஜேசுவரன், மதிவாணன் ஆகியோர் விசாரித்தனர். படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் டி.ஆர்.ராஜா கோபால் இலங்கையில் நடந்த உண்மையான சம்பவத்துக்கும், படத்தில் கூறப்பட்டுள்ள கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார். நீதிபதிகள் படத்தை வெளியிட தடை எதுவும் விதிக்கவில்லை. இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. மத்திய திரைப்பட தணிக்கை குழு ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் 3–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். 
இந்த நிலையில் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் சென்னையில் அவசர கூட்டம் நடத்தினார்கள். சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மெட்ராஸ் கபே படத்தை திரையிடுவதா, வேண்டாமா என்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. 
தியேட்டர் அதிபர் ஒருவர் கூறும் போது, ‘‘மெட்ராஸ் கபே படத்தை திரையிடக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்த்து உள்ளன. முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறியுள்ளனர். தியேட்டர்களுக்கு இது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் மெட்ராஸ் கபே படத்தை திரையிட மாட்டோம்’’ என்று கூறினார். தியேட்டர் முகப்புகளில் வைக்கப்பட்டு இருந்த மெட்ராஸ் கபே பட பேனர்களும் அகற்றப்பட்டு விட்டன.

ad

ad