புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

ராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!

வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்னால் இராணுவத்தினர் சிவில் உடையில் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும்; பாணயில் நடந்துகொள்கின்ற போதிலும் மக்கள் அனைத்தையும் மீறி வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் தமிழ்த் தேசியம் வெல்வவேண்டும். தமிழ் மக்களின் ஒற்றுமையை நாம் சர்வதேசத்திற்கு வெளிக்காட்ட வேண்டும். இது எமது உரிமைக்கான தேர்தல். நாங்கள் பின்வாங்க மாட்டோம். எமது வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களை வந்து சந்தித்தனர். யாருக்கும் அஞ்சவேண்டாம் என்று அவர்கள் மனத் தைரியத்தை ஊட்டியுள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

ஆனந்தி எழிலன் தேர்தலில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பாக நாங்கள் எதையும் அலட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் துணிந்து சொல்கின்றோம். இன்று காலையும் அவர் எங்களைச் சந்தித்தார். அவர் தேர்தலில் இருந்து விலகவில்லை. சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரங்களுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நல்ல பதில் கிடைக்கும் என்று மக்கள் தெரிவித்தனர்.
இராணுவமோ இராணுவப் புலனாய்வாளர்களோ எங்களை எதுவும் செய்ய முடியாது, அவர்களின் அச்சுறுத்தல்களை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை !!!

ad

ad