புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2013

மாதுளுவாவே சோபித தேரருடன் சந்திரிக்கா இரகசிய சந்திப்பு: அரசியல் துறையில் சர்ச்சை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுளுவாவே சோபித தேரரை கடந்த வாரம் சந்தித்து ரகசியமான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த சந்திப்பு அரசியல் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைமைகள் பற்றி இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
இதன் போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சந்திரிக்கா குமாரதுங்க, அதனை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் சோபித தேரரின் நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் அமைச்சர் மேர்வின் சில்வா, மாதுளுவாவே சோபித தேரரை சந்திக்க நாகவிகாரக்கு சென்றிருந்தமை அரசியல் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து மேர்வின் சில்வாவை தொடர்பு கொண்டிருந்த ஜனாதிபதி, மாதுளுவாவே சோபித தேரருடன் என்ன பேசப்பட்டது என வினவியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த போவதாக கூறிவருகின்றார்.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதிக்கும் தேரருக்கும் இடையில் இந்த சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad