புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

சட்டசபை தீர்மானம்: தி.மு.க., வரவேற்ப
 இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசினார். அதன்பின்னர் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். 
சட்டசபையில் சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலையையும், போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கின்ற வகையிலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுடைய உயிர்களையும், உடமைகளையும், உரிமைகளையும் பாதுகாக்கும் வகையிலும், ஈழத் தமிழர்கள், அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வை, அவர்களே முடிவெடுத்துக்கொள்ளும் வண்ணம், ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கின்ற வகையிலும், அதற்காக மத்திய அரசை வற்புறுத்துகின்ற வகையிலும் கொண்டுவரப்படும் அரசினர் தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வரவேற்று வழிமொழிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்வாறு பல்வேறு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்தபிறகு, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ad

ad