புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

யாழ். வலி. வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் எமது போராட்டம் தொடர்ந்தது தொடரும்: சிறீதரன் பா.உ
வலி. வடக்கு பகுதியில் பாரிய இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் ஏராளமான  மக்கள் கலந்து கொண்டதுடன் எமது நில மீட்பு தொடர்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எமது தாயகமான வட-கிழக்கு பகுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது இது தொடரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
இன்றைய வலி.வடக்கு கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பிலும் எதிர்கால போராட்டம் தொடர்பிலும் லங்காசிறி வானொலிக்கு விளக்குகிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.
வலி. வடக்கு மக்களால் ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஆரம்பம்!

வலிகாமம் வடக்கில் மக்களை மீளக்குடியேற அனுமதிக்கக் கோரி இடம்பெயர்ந்த மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவான், எஸ். சிறிதரன், வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.க. சிவஞானம், கல்வி அமைச்சர் பி. குருகுலராசா மற்றும் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா. கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், க. பரஞ்சோதி மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இடம்பெயர்ந்த மக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இதேவேளை காங்கேசன்துறை வீதி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து மாவிட்டபுரம் வரை பல இடங்களிலும் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதேபோன்று மாவிட்டபுரம் கீரிமலை வீதியிலும் பொலிஸார் வழமைக்கு மாறாக கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆலய சுற்றாடலிலும் அதிக எண்ணிக்கையான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளார்கள்.
2ம் இணைப்பு
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமதுநிலங்களை மீளவும் வழங்க வேண்டும், மக்களுடைய வீடுகளை கண்மூடித்தனமாக அழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரியும் வலிகாமம் வடக்கு மக்கள் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர்.
வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் ஏற்பாட்டில் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 8.30மணியளவில் ஆரம்பமாகி தொடர்ந்து ம் நடைபெற்று வருவதுடன், தொடர்ச்சியாக 5 தினங்களுக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய போராட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம்பெயர்ந்து பல வரு டங்களாக அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுமார் 500ற்கும் மேற்பட்ட மக்கள் இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பதாகைகள், மற்றும் எதிர்ப்பு கோசங்கள் இல்லாமல், மிகவும் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதேவேளை கட ந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அடங்கும் இரு கிராமசேவகர் பி ரிவுள் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டபோதும், மக்கள் அதில் ஏமாற்றமடையாமல் இன் றைய போராட்டத்தில் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை இன்று போராட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நி லையில் தெல்லிப்பளை தொடக்கம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் வரையிலான காங்கேசன்துறை வீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், வழக்கம்போல் பல இடங்களில் போராட்டத்திற்கு வந்த மக்கள் திருப்பியனுப்பப்பட்டுமுள்ளனர்.

ad

ad