புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

இந்தியாவின் மனமாற்றம் இலங்கைக்கு பேரடி-பாஸ்கரா 
இலங்கை மீதான இந்தியாவின் மென்மையான போக்கின் மாற்றமானது இலங்கைக்கு கசப்பான ஓர் பாடத்தை தெளிவாக தெரிவித்துள்ளது.
இலங்கை அண்மைக்காலத்தில் தனது போர்க்குற்றங்களை மறைப்பதிலும் மக்களின் உரிமைகளை மறுப்பதிலும் எள்ளளவும் மாற்றம் இல்லாமல் நடப்பதும் வழங்கிய உறுதி மொழிகளை காற்றில் பறக்க விடுவதுமான செயல்களினால் இலங்கைக்கு யுத்த காலம் முதல் இன்றுவரை ஆதரவாக இருந்த இந்தியாவின் மனமாற்றம் இலங்கைக்கு பேரடியாக மாறியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மக்கள் தமது உணர்வுகளை தெட்டத்தெளிவாக கூட்டமைப்பின் பாரிய வெற்றி மூலம் இந்தியாவிற்கும், உலக நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபை, சமூகத் தொண்டு நிறுவனங்களுக்கும் தமது உணர்வுகளை தெரிவித்திருந்த வேளையில், அரசு எள்ளலவும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மக்களை மீண்டும் சீண்டும் நடவடிக்கைகளையும் போர்க்கால வடுக்களுக்கு பரிகாரம் தேடாமல் மூடி மறைப்பதிலேயே முழுமூச்சாக இருக்கின்றது.
இச் சூழ்நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின் பாரிய அத்துமீறல்களான கிளிநொச்சியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சீமெந்து தயாரிக்கும் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ள காணி சுவிகரிப்பு, நாவற்குழியில் அத்துமீறிய சிங்களக் குடியேற்ற முயற்சி, வலி.வடக்கு மக்களின் வீடுகளை உடைத்தமை, தம்புள்ளை அம்மன் கோயில் தரமட்டமாக்கியது என மாகாண சபை தெரிவு செய்யப்பட்டபின் அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
மேலும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அதுவும் ஒரு மாகாண சபையை மிகப் பெரும்பான்மையுடன் நிர்வகிக்கின்ற ஓர் அரசியற் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் வடக்குக்கு சென்று மக்கள் குறையை கண்டறிந்து கூட்டமைப்பு அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பத்திரிகையாளர்களைச் சந்திக்க முயன்ற அவுஸ்திரேலிய செனட் சபை உறுப்பினர் பினர் லீ ரைனோன், நியூஸிலாந்து கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யான் லொக்கி ஆகியோர் பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையில் வந்து கலந்து கொள்ளும் இவ்வேளையில் திருப்பியனுப்பப்பட்டது இலங்கை போர்க்காலத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்களையும் தற்போது மக்கள் துன்பங்களையும் மறைப்பதில் மும்மரமாக இருக்கின்றது என்பதைத் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றது.
இதற்குமேல் மீள்குடியேற்றம் வலி வடக்கு மக்கள் தமக்கு ஓர் நல்லகாலம் கிடைக்கும் தாம் மீள தமது நிலத்தில் குடிபுக வழியேற்படும் என எதிர்பார்த்த வேளையில் மக்களை வலுக்கட்டாயமாக வேறு இடத்தில் குடியமர்த்த முனைவதும் மக்களின் குறைகளை அகிம்சைப் போராட்டத்தின் மூலம் வெளிக்கொணர முன்னுழைத்த வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தப்பட்டு,
இராணுவ முகாமில் இருந்து 50மீட்டர் தொலைவில் உள்ள அவரின் வீட்டிற்கு முன்பாக மாட்டுத்தலையினை வைத்து அச்சுறுத்தியமை கண்டிக்கத்தக்கதொன்றாகும் இது நல்லிணக்கம் என்பது உதட்டளவில் மட்டும் தான் என்பது தெட்டத்தெளிவாக புலனாகின்றது.
அரசு இந்தியாவிற்கும் உலக நாடுகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் வழங்கிய உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிட்டு பொதுநலவாய மாநாடு நடைபெறப்போகும் இவ்வேளையிலேயே தன் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முயல்வது எக்காலத்திலும் அரசு நல்லிணக்கத்தை எட்டவிரும்பவில்லை என்பதையே காணக்கூடியதாகவே உள்ளது இது கண்டிக்கத்தக்கதுடன் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
இதனால் தான் இலங்கை சொல்வதை ஒருநாளும் செய்வதில்லை என எண்ணி பொதுநலவாய மாநாட்டில் கனடியப் பிரதமர் தொடர்ந்து இலங்கைக்கு இன்றும் உதவி செய்துடன் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த வழிசமைத்த இந்தியப் பிரதமர் பொது நலவாய மாநாட்டை புறக்கணித்ததில் இருந்து இந்தியாவின் மனநிலையையும் மற்றைய நாடுகளின் மனநிலையும் அரசு புரிந்துகொண்டு அரசு இனியாவது தன் போக்கில் இருந்து மாறி சுபீட்சமான ஒரு இலங்கையை உருவாக்க முயல வேண்டும் இல்லையேல் இலங்கையின் அழிவு தவிர்க்க முடியாததாக போய்விடும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.

ad

ad