புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2013

கொமன்வெல்த்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேறியது
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.



அந்த தீர்மானத்ததில் உள்ள வாசகம் வருமாறு:-

இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்.

பெயரளவில் கூட பங்கேற்க கூடாது என்று இந்த பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

ஆனால், மத்திய அரசு அதை ஏற்காதது தமிழர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கொமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்பார் என்ற மத்திய அரசின் முடிவு மனவேதனை அளிக்கிறது.

கொமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக அடுத்த 2 ஆண்டுகளுக்கு இலங்கை அதிபர் நீடிக்கவும், வழிவகை உண்டாக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியா கொமன்வெல்த் மாநாட்டை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தீர்மானித்தை முன்மொழிந்தார்.

இதையடுத்து, இந்த தீர்மானம் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களின் விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சுமார் இரவு 7.50 மணியளவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த குரல் வாக்கெடுப்பில், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதம் வருமாறு:-

முதல்வர் ஜெயலலிதா பேச்சு
தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன் முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது அவர், கொமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காதது வழக்கமான முடிவுகளில் ஒன்றுதான். கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் நடந்த 10 மாநாடுகளில் 5 மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்கவில்லை. இலங்கையில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் பங்கேற்பார் என்ற முடிவு மனவேதனை அளிப்பதாகும். மத்திய அரசின் முடிவு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மதிப்பதற்கு சமமாக இருக்கிறது. மத்திய அரசின் முடிவை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். இலங்கையில் மாநாடு நடத்துவது, போர்க்குற்றம் நிகழத்தியவர்களை பாதுகாப்பதற்கு சமமான செயலாகும் என்றார்.

சரத்குமார் பேச்சு
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய சமத்துவ மக்கள் சட்சி தலைவர் சரத்குமார், இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காக்கிறது. இலங்கை தொடர்பாக பிரதமர் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவித்ததில்லை. பேசாத பிரதமராகவே இருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் வெளிநடப்பு
இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் குறித்து சரத்குமார் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சரத்குமார் கூறிய கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச பின்பு அனுமதி தரப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார். இதையடுத்து, பிரதமர் பற்றி சரத்குமார் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

கிருஷ்ணசாமி வெளியேற்றம்
அரசினர் தீர்மானத்தின் மீது புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார். அவர் பேசிய பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டன. தொடர்ந்து பேசுவதற்கு அவர் முயன்றபோது சபாநாயகர் அனுமதி மறுத்தார். மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லாவை பேச சபாநாயகர் அழைத்தார். ஜவாஹிருல்லா தீர்மானத்தின் மீது பேச முயன்றபோது, டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். ஆனால், சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. ஜவாஹிருல்லா பேசி முடித்த பின்பு மீண்டும் கிருஷ்ணசாமி எழுந்து பேச முயன்றார். அனுமதி மறுக்கப்பட்டதும், சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து போராடினார். அவரை அவையில் இருந்து வெளியேற்றும்படி சபாநாயகர் உத்தரவிட கிருஷ்ணசாமி வெளியேற்றப்பட்டார்.

கிருஷ்ணசாமி பேட்டி
சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணசாமி அளித்த பேட்டியின்போது, கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது. புறக்கணிக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதுமா? இப்படி நாம் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி வருகிறோம். ஏன் தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை? அனைத்து கட்சி உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று டெல்லியில் முறையிடலாமே. வெறும் தீர்மானம் மட்டும் போதாது. தமிழக முதல்வர் கௌரவத்தை விட்டுக்கொடுத்து விட்டு இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று அவையில் பேச நினைத்தபோது அனுமதிக்கவில்லை.

உலகத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நாம் குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம். உள்ளூர் தமிழர்கள் கொல்லப்படும் போது ஏன் மௌனம் சாதிக்கிறோம். ராஜபக்ச செய்தால் தவறு. தமிழ்நாட்டு காவல் துறையினர் செய்தால் மட்டும் நியாயமா? இதையும் பதிவு செய்ய நினைத்தேன். ஆனால், அனுமதிக்கவில்லை. அதனால் வெளியேற்றப்பட்டேன் என்றார்.

ad

ad