புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2013


கொளத்தூர்மணி கைது: வைகோ கண்டனம்

சேலத்தில் வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

சேலம் வருமானவரி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கொளத்தூர் மணி மீது பொய் வழக்கு போடப்பட்டு திங்கள் கிழமை வரை ஜாமினில் வெளியில் எடுக்க முயற்சிப்பதற்கு கூட இடம் அளிக்காமல், நேற்றிரவு கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணியை, விடிவதற்குள் சிறையில் அடைத்தது திட்டமிட்டு இந்த கைது சம்பவம் நடந்துள்ளதாகவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, சிலர் சிறு வன்முறையில் ஈடுபட்டு இருக்கலாம். அந்த சம்பவத்திற்கும் கொளத்தூர் மணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வைகோ கூறியுள்ளார்.

ad

ad