புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2013

இலங்கையில் கிரிக்கெட் நடைபயணம்! கிளிநொச்சியில் ஆரம்பமானது/பீ பீ சீ 
இலங்கையின் கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடைபயணம் ஒன்று வெள்ளியன்று வடக்கே கிளிநொச்சி நகரில் இருந்து தலைநகர் கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
இங்கிலாந்தின் பிரபல்யமிக்க முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் சேர் இயன் டெரன்ஸ் பொத்தம் மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் மஹெல ஜயவர்தன ஆகியோருடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி நகரில் ஆரம்பமாகிய இந்த நடைபயணம் மாங்குளம் மகாவித்தியாலய விளையாட்டு மைதானம் வரையில், வடபகுதியின் கிரிக்கெட் பாரம்பரியத்தை பாடசாலை மாணவர்கள் மற்றும் விளையாட்டுத் துறையினர் மத்தியில் ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கிளிநொச்சியில் ஆரம்பமாகிய இந்த முதல் நாள் பயணம் மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சென்று நிறைவுறும் என்றும் அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து செல்லும் இந்த நடைபயணம், தென் மாகாணத்தில் உள்ள சீனிகமவில் சென்று முடிவடையும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் கிளிநொச்சி மாவட்ட ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா மற்றும் முக்கியஸ்தர்களும் பெரும் எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள். விளையாட்டு வீரர்கள். பொதுமக்கள், ஊர்ப்பிரமுகர்கள் என பலதரப்பட்டோரும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.

ad

ad