புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2013

கைது செய்யப்பட்ட ஆஸி. ஊடகவியலாளர்களின் கணணித் தரவுகள் இலங்கை அதிகாரிகளால் அழிப்பு
இலங்கையில் சுற்றுலா வீசாவில் வந்து கருத்தரங்கை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச ஊடக மையப் பணிப்பாளர் ஜெக்லின் பாக் மற்றும் ஜீன் வோர்திங்டன் ஆகியோரின் கணணிகளின் முழுமை தரவுகளும் இலங்கை அதிகாரிகளால் அழிக்கப்படடுள்ளன.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதன்போது அவர்களின் கணணிகளில் உள்ள அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டமை தெரியவந்ததாக இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த இருவரும் தமது அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கணணியின் ஊடாகவே மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் அவர்களின் கணணித் தரவுகள் புரிந்துணர்வின்மை காரணமாகவே அழிக்கப்பட்டதாக இலங்கையின் குடிவரவு அதிகாரிகள் காரணம் கூறியுள்ளதாக இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் இலத்திரனியல் வீசா முறையின்படி சுற்றுலா வீசாவில் வருவோர் கருத்தரங்குகளை நடத்தக்கூடாது என்று கூறப்படவில்லை என சர்வதேச ஊடக சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ad

ad