புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2013

மானிப்பாய் பரிஸ் அணி 44 ஓட்டங்களால் வெற்றி
 நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் 2 ஆவது ஆண்டாக நடத்தும் 20 பந்து பரிமாற் றங்களைக் கொண்ட துடுப்பாட்ட சுற்றுப் போட்டியின் 2 ஆவது சுற்றில் 3 ஆவது போட்டி கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற
போது மானிப்பாய் பரிஸ் அணி,  நியூஸ்ரார் அணியை 44 ஓட்டங்களால் வெற்றி வெற்றி.
முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் பரிஸ் அணி 20 ஓவர்களில் 4 இலக்குகளை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றனர். 
வினோத் 88, சுபாஸ்கரன் 37 ஓட்டங்களைப் பெற்றனர். நியூஸ்ரார் சார்பில் மோகனதீபன்,  சஜீத் தலா 2 இலக்குகளைக் கைப்பற்றினர்.
 
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸ்ரார் அணி 14.4 ஓவர்களில் சகல இலக்குகளையும் இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றனர். 
 
உத்தமன் 41,  றொசான், சஜீத் தலா 15 ஓட்டங்களைப் பெற்றனர். மானிப்பாய் பரீஸ் சார்பில் நிதர்சன்,  பிரதீஸ் தலா 3 இலக்குகளையும்,  டில்சான் 2 இலக்குகளையும்,  சுபாஸ், வினோத் தலா ஓர் இலக்கினையும் கைப்பற்றினர்.
 
இந்தச் சுற்றுப் போட்டித் தொடரில் மானிப்பாய் பரிஸ் அணி 20.20 புள்ளிகள் (5 போட்டிகள்),  நியூஸ்ரார் அணி 18.99 (5 போட்டிகள்) புள்ளிகளைப் பெற்றுக் கொண் டமை குறிப்பிடத்தக்கது.    

ad

ad