புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

தெலங்கானா மசோதா தாக்கல் எப்போது? ஜனாதிபதியிடம் மீண்டும் அனுமதி பெற முடிவு
ஆந்திராவை பிரித்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டிய 10 மாவட்டங்களை தெலங்கானா மாநிலமாகவும், எஞ்சிய 13 மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாந்
திரா பகுதியை புதிய ஆந்திர மாநிலமாகவும் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. 

இதை தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார். ஆந்திராவை பிரிக்க சீமாந்திரா பகுதி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இந்த பிரச்னை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இதனால் தெலங்கானா மசோதா இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 

தெலங்கானா மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தாமல் நிலுவையில் வைக்கப்பட்டால் அது காலாவதியாகாது. அதே சமயம், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டால், புதிய மக்களவை பொறுப்பேற்கும் போது அது காலாவதியாகி விடும். இதனால், மசோதாவை முதலில் மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
 தெலங்கானா மசோதாவில் புதிய ஆந்திராவுக்கான தலைநகரை உருவாக்க கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இது பண மசோதா எனவும், பண மசோதாவை முதலில் மக்களவையில்தான் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மாநிலங்களவை செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டஅமைச்சகத்தின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 

இந்த சிக்கல் காரணமாக, மக்களவையிலேயே தெலங்கானா மசோதாவை முதலில் தாக்கல் செய்வது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது. ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்ய ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருப்பதால் தற்போது மக்களவையில் தாக்கல் செய்ய புதிதாக அனுமதி கேட்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் நாளை மறுநாள் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படும். இதற்கிடை யில் தெலங்கானா மசோதா வுக்கு ஆதரவு கேட்டு பாஜ தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன்சிங் நாளை பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.  
மக்களவையில் அமளி

மக்களவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும், வழக்கம் போல் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதே போல், மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் அந்த அவையும் வழக்கம் போல் ஒத்திவைக்கப்பட்டது.

ad

ad