புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014


திமுக, தேமுதிகவுடன் பேசி வருகிறோம்!
ஜி.கே.வாசன் பேட்டி!


கூட்டணி குறித்து திமுக, தேமுதிகவுடன் பேசி வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மீனவர் பிரச்சனையை பொறுத்தவரை மத்திய அரசு எடுக்கும் தொடர் முயற்சி காரணமாக நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். தமிழகத்தில் மட்டும் அரிசி உற்பத்தி விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசை பொறுத்தவரை எல்லா மாநிலத்தையும் சமமாக கருதி செயல்பட்டு வருகிறது என்றார்.
திமுக, தேமுதிகவுடன் ககாங்கிரஸ் கூட்டணி ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, கூட்டணியை பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசப்பட்டு வருகிறது. திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேசி வருகிறோம். எனவே கூட்டணி குறித்த முடிவுகளை பொறுத்திருந்து பாருங்கள். காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவு அனைவரது ஒத்த கருத்தாகவே அமையும் என்றார்.

ad

ad