புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 பிப்., 2014

தெலங்கானாவை எதிர்த்து மக்களவையில் அமளி 6 காங்கிரஸ் எம்பிக்கள் நீக்கம்

தெலங்கானா மசோதா விவகாரத்தில் கட்சியின் முடிவுக்கு எதிராக செயல்படுவது டன், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் நோட்டீஸ் கொடுத்துள்ள சீமாந்திராவை
சேர்ந்த 6 எம்.பி.க்களை காங்கிரஸ் அதிரடியாக நீக்கியுள்ளது. ஆந்திராவை பிரித்து தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆந்திரா மறுசீரமைப்பு மசோதா - 2013’ஐ ஜனாதிபதிக்கு மத்திய அரசு அனுப்பியது. அதை ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும்படி ஜனாதிபதி அனுப்பினார். ஆனால், ஆந்திர முதல்வர் கிரண்குமார் உட்பட சீமாந்திராவை சேர்ந்த அனைத்து கட்சியினரும் இந்த மசோ தாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இருப்பினும், தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ள மத்திய அரசு, தற்போது நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, மாநிலங்களவையில் நேற்று இதை தாக்கல் செய்ய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித் தார். ஆனால், இது மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்ற சந்தேகத்தை மாநிலங்களவை செயலா ளர் கிளப்பியதை தொடர்ந்து, அதை மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யும் திட்டத்தை கடைசி நிமிடத்தில் மத்திய அரசு கைவிட்டது. நிதி மசோதாவாக இருந் தால், அதை முதலில் மக்களவையில்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, மசோதாவை முதலில் மக்களவையில் தாக்கல் செய்வதற்கு அனுமதி அளிக்கும்படி ஜனாதிபதியை மத்திய அரசு கேட்டு கொள்ள உள்ளது.

இந்நிலையில், தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க கட்சி தலைமை எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்படாமல் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க் கள் 6 பேரை, கட்சியில் இருந்து சோனியா காந்தி நேற்று அதிரடியாக நீக்கினார். தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும், நாடாளுமன்றத்தில் இவர்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதனால், சோனியாவுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தின் விளைவாகவும் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இதனால், சப்பம் ஹரி, ஜி.வி. ஹர்ஷா குமார், வி.அருண் குமார், எல்.ராஜகோபால், ஆர்.சாம்பசிவ ராவ், ஏ.சாய் பிரதீப் ஆகிய எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தெலங்கானா மசோதாவை அடுத்த 2 தினங்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கு இடையூறாக உள்ள கட்சியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால்தான் கட்சிக்குள் கட்டுப்பாடு நிலவும் என்பதில் கட்சியின் தலைமை உறுதியாக உள்ளது.

ad

ad