முறிகண்டி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவர் பலி

பழைய முறிகண்டி கோயில் அருகில் இடம்பெற்ற விபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான வானில் இருந்து சிதைந்த நிலையில் காணப்பட்ட உடற்பாகங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பழைய முறிகண்டி கோயில் அருகில் விபத்து ; 6 பேர் பலி
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வான் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதில் சம்பவ இடத்தில் ஐவர் பலியாகியுள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஏழு வயது சிறுவனும், ஏழு வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.