புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


தமிழக பட்ஜெட் 2014 -2015 : கூவம் நதியை சீரமைக்க 3,834 கோடியில் திட்டம்
தமிழ்நாடு சட்டசபையில் 2014–15–ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தாக்கல் செய்து பேசினார்.


தமிழக பட்ஜெட்டில்,’’சென்னையில் உள்ள ஆறுகளில் கழிவு நீர் 337 இடங்களில் கலக்கின்றன. அதில் 179 இடங்களில் தடுத்து, இந்த ஆறுகளைச் சீரமைப்பதற்காக ரூ.150 கோடி செலவில் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இப்பணிகள் வரும் 2015–ல் முடிவடையும். ரூ.163 கோடி செலவில் 2014–2015 ஆண்டில் மீதமுள்ள 158 இடங்களிலும் பணிகள் தொடங்கப்படும்.
கூவம் நதியை முழுமையாகச் சீரமைத்து மீட்டெடுப்பதற்கான ஒரு பெரும் திட்டம் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். மொத்தம் ரூ.3,833.62 கோடி மதிப்பீட்டிலான இந்தப் பெரும் திட்டம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் மறுகுடியமர்வு செய்யவும் ரூ.2,077.29 கோடி செலவிடப்படும்.

இத்திட்டத்தை ‘சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ ஒருங்கிணைப்பு அமைப்பாக இருந்து செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக 2014–2015 ஆண்டு வரவு–செலவு திட்டத்தில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 2,500 மெகாவாட் அளவிலான புதிய மின் உற்பத்தித்திறன், கூடுதலாக இந்த அரசால் சேர்க்கப்பட்டுள்ளது. நிலுவையிலிருந்த அனல் மின் திட்டங்களை விரைவுபடுத்த இந்த அரசு எடுத்த நடவடிகைகளால் இது சாத்தியமானது. நீண்ட கால அடிப்படையில் 3,330 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடுத்தரக் கால அளவில் மின் கொள்முதல் செய்ய 500 மெகாவாட் அளவிற்கு ஒப்பந்தம் செய்து மின்சாரம் வாங்கப்படுகிறது.
தற்போது மாநிலத்தில் தடையில்லாத தரமான மின்விநியோகம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத உயர் அளவாக 29.1.2014 அன்று 12,799 மெகாவாட் உச்சத் தேவையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் நிறைவு செய்ய முடிந்தது.
சென்னை மாநகரத்தில் மின்கடவு அமைப்பை வலுப்படுத்த ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்தின் ரூ.3,572 கோடி நிதியுதவியுடன் ரூ.5000 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நாட்டின் பிற பகுதிகளிலிருந்து மின்சாரத்தைப் பெற்றிட, திருவலத்தில், உயர் அழுத்த மின்தடத்தோடு கூடிய 400 கிலோவாட் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணியும் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கே.எப்.டபுள்யூ என்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத் தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை ரூ.1593 கோடி மதிப்பீட்டில் அமைக்கவும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
2014–2015–ம் ஆண்டில் மின் மானியமாக ரூ.5400 கோடியும், பங்கு மூலதனமாக ரூ.2000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரூ.6353 கோடி கடன் தொகையில் 2013–2014–ம் ஆண்டில் ரூ.1000 கோடியை இந்த அரசு ஏற்றுள்ளது. 2014–2015–ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் கடன் பொறுப்பில் மேலும் ரூ.2000 கோடி அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். எஞ்சிய கடன் தொகையை வரும் ஆண்டுகளில் அரசு ஏற்றுக் கொள்ளும்.
சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 2014–2015–ம் ஆண்டு இந்த ஒதுக்கீடு ரூ.2800 கோடியாக மேலும் உயர்த்தப்படும். 2014–2015–ம் ஆண்டில் இத்திட்டத்தில் 1500 கி.மீ நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3500 கி.மீ நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ரெயில்வே பாலப்பணிகள் திட்டத்துக்காக 2014–2015–ம் ஆண்டு ரூ.683.63 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை வலுப்படுத்தவதற்காக செயல்படுத்தப்படும் ரூ.86.65 கோடி இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணி 2015–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்.
சென்னை வெளிவட்டச் சாலையின் முதல் கட்டப்பணிகள் ரூ.1081.40 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளது. இரண்டாவது கட்டப்பணி ரூ.1075 கோடி செலவில் வரும் மார்ச் மாதம் தொடங்கப்படுகிறது.
இந்த அரசு செயல்படுத்த முனைந்துள்ள பெரும் திட்டங்களுள் சென்னை சுற்றுவட்டச் சாலையும் ஒன்றாகும். ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்தின் கடன் உதவியோடு இத்திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு உத்தேசித்துள்ளது. இதுதவிர, சென்னை மாநகரப் பகுதிகளில், பாலங்கள், சாலைகள், ரயில்வே மேம்பாலங்கள் ஆகிய வற்றிக்கான 17 திட்டங்களை நிறைவேற்ற ரூ.2000 கோடி நிதியுதவியை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து பெற்றுப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்ட திட்டத்தின் கீழ் ரூ.9061 கோடி செலவில் முக்கியச் சாலைகளை மேம்படுத்த 2049 கி.மீ நீளமுள்ள சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து வசதியை மேம்படுத்த கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.697.96 கோடி செலவில் 3994 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 2014–2015–ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் ரூ.200 கோடி செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை சரிசெய்ய 2014–2015 ஆண்டிற்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
சென்னை மாநகரத்தில் ஒரு புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பதை செயல்படுத்த இந்த அரசு உத்தேசித்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து அமைப்பிற்கான இந்த உயர் தொழில்நுட்பத் தீர்வைச் செயல்படுத்துவதற்கான முதல் கட்ட ஆய்வும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியும் விரைவில் மேற்கொள்ளப்படும். சென்னை மாநகரத்தின் போக்கு

ad

ad