புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம்! சுதந்திரத்திற்காக போராடும் இனத்தின் கலையும் ஒர் ஆயுதமே
புங்குடுதீவை சேர்ந்த இயக்குனர் சதா பிரணவன் பாரிசில் வாழ்ந்து வருபவர் .இவருக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது வாழ்த்துகிறோம் 

ஈழ விடுதலையின் வெந்தணலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டி வென்றுள்ளது.
பிரென்சு சினிமா என்பது உலக சினிமாவின் வழித்தடத்தில் தனித்துவமாக விளங்கிவரும் நிலையில், பிரான்சின் பிரசித்தி Mobile Film Festival  பெற்ற கைபேசி குறும்படங்களுக்கான போட்டியிலேயே இப்பதிவு வெற்றியீட்டியுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட கைபேசிக் குறும்படங்கள் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் அதிகத்தடவை இணையப் பார்வையாளர்களால் (27 000 தடவை) பார்க்கப்பட்ட படம் என்ற தகுதி நிலையில் படம் வெற்றியீட்டியுள்ளது.
அவதாரம் நிறுவனம் தயாரித்திருந்த இக்குறும்படமான,து சங்கர் தேவா அவர்களின் கதையினை சதா பிரணவன் அவர்கள் இயக்கியிருக்க டெ.சுபன் அவர்களால் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
400க்கும் மேற்பட்ட பிரென்சு நட்சத்திர பிரபலங்களுக்கு மத்தியில் இவ்வெற்றிக்கான பட்டயத்தினைப் பெற்றிருந்த இயக்குனர் சதா பிரணவன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
எனது மக்களின் துயரங்களையும், எனது மண்ணின் பிரிவின் வேதனைகளையும் வேற்றினக் கலைஞர்கள் சந்திக்கும் இடங்களில் வெளிக்கொண்டு வருவதற்கு இது வாய்ப்பாக அமைவதோடு, இவ்வாறான முயற்சிகள் மூலம் எமது இனப்பிரச்சினைகளை உலகறியச் செய்ய முடிகின்றது எனத் தெரிவித்தார்.
சுதந்திரத்திற்காக போராடும் இனத்தின் கலையும் ஒர் ஆயுதமே என்பதற்கு மீண்டும் ஒர் சான்றாக இக்குறும்படத்தின் வெற்றி அமைந்துள்ளதென,  நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரான்சினை தளமாக கொண்டு இயங்குகின்ற ஈழத்தமிழர் திரைப்படச் சங்கமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ad

ad