புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


50 பேர் கொண்ட பிரசார கமிட்டி! சோனியா தலைவர்! ராகுல் காந்தி இணைத் தலைவர்!
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 50 பேர் கொண்ட பிரசார கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் இணைத்தலைவராக, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். 
பிரதமர் மன்மோகன்சிங்கும் கமிட்டியில் இடம்பெற்றுள்ளார். மேலும்,
மத்திய மந்திரிகள் ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, குலாம்நபி ஆசாத், கமல்நாத், ஆனந்த் சர்மா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சல்மான் குர்ஷித், வி.நாராயணசாமி, ஜெய்ராம் ரமேஷ், மணீஷ் திவாரி, ஜிதேந்திரசிங், ராஜீவ் சுக்லா, ஜோதிர்ஆதித்ய சிந்தியா,

அகில இந்திய காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஜனார்த்தன் திவிவேதி, அம்பிகா சோனி, திக்விஜய்சிங், குருதாஸ் காமத், பி.கே.ஹரிபிரசாத், முகுல் வாஸ்னிக், சி.பி.ஜோஷி, மதுசூதன் மிஸ்திரி, ஷகீல் அகமது, அஜய் மக்கான், மோகன் பிரகாஷ்,சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேல், முன்னாள் முதல்–மந்திரிகள் அசோக் கெலாட், ஷீலா தீட்சித், அமரிந்தர் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சத்யவிரத் சதுர்வேதி, ரந்தீப் சுர்ஜிவாலா, ஜே.டி.சீலம், ராஜிந்தர் கவுர் பாட்டல் உள்ளிட்டோருக்கும் காங்கிரஸ் பிரசார கமிட்டியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ad

ad