புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014

ஐ.பி.எல். முதல் நாள் ஏலம் நிறைவு: யுவராஜ் சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு ஏலம்

 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெற்றது. 219 சர்வதேச வீரர்கள் உள்பட 514 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

இன்றைய ஏல நிலவரம்
தமிழகத்தை சேர்ந்த முரளி விஜயை. தில்லி அணி 5 கோடி ரூபாய்க் கு முரளி விஜயை எடுத்தது. இதையடுத்து இங்கிலாந்தை சேர்ந்த நட்சத்திர வீரர் பீட்டர்சனை தில்லி அணி ‘மேட்ச்’ கார்டை பயன்படுத்தி அவரை ரூ.9 கோடிக்கு எடுத்தது. பின்னர் யுவராஜ்சிங் ஏலம் விடப்பட்டார். அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக தொகையான ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது.  இவர் நிர்ணயித்த தொகையை விட  7 மடங்கு விலைக்கு போனார்.
கொல்கத்தா அணிக்கும், பெங்களூர் அணிக்கும் ஏற்பட்ட போட்டியின் காரணமாக யுவராஜ் சிங் விலையும் உயர்ந்தது. தென்ஆப்பிரிக்கா வீரர் காலிசை ரூ.5 ½ கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எடுத்தது. அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஷேவாக் ரூ.3.2 கோடிக்குத் தான் விலை போனார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை எடுத்தது.
அடுத்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னரை ஐதராபாத் அணி ரூ.5½ கோடிக்கு எடுத்தது. தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு அதிக மவுசு இருந்தது. அவரை ரூ.12½ கோடிக்கு தில்லி அணி எடுத்தது. அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 6 மடங்குக்கு அதிகமாக விலை போனார். டூபெலிசிசை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ4.75 கோடிக்கு தக்க வைத்தது.
ஜோஸ் கசல்வுட்டை ரூ. 50 லட்சத்திற்கு மும்பை இந்தின்ஸ் ஏலம் எடுத்தது. நியூசிலாந்தின் டிம் சவுத்தியை ரூ 1.20 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டிஸின் ஜோசன் கோல்டரை ஐதராபாத் அணி ரூ. 75 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.
 பென் ஹில்பன்காஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. ஒரு கோடிக்கு ஏலம் எடுத்தது. கனே ரிச்சர்ட்சனை ராஜஸ்தான் ராயல் அணி ரூ. ஒரு கோடிக்கு ஏலம் எடுத்து. ஜிம்மி நிசாமை ரூ. ஒரு கோடி தில்லி அணி ஏலம எடுத்தது வேணுகோபால் ராவை ரூ. 55 லட்சத்திற்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது. சாமுவேல் பத்ரியை 30 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஙஸ அணி ஏலம் எடுத்தது.

ad

ad