புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கையர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க முடியாது
சுவிற்சர்லாந்தில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு,  இலங்கை உள்ளிட்ட நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த நாட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடித்துள்ளது.
அதேவேளை, குரோசியா, மொன்ரனிக்ரோ நாட்டவர்களுக்கு ஆயுதங்களை வைத்திருக்க விதிக்கப்பட்டிருந்த தடையை சுவிஸ் அரசாங்கம் நீக்கியுள்ளது.
சுவிசில், ஆயுதங்களை வைத்திருக்கவும் வாங்கவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய உறுப்பு நாடுகளான குரோசிய மற்றும், மொன்ரனிக்ரோ நாட்டவர்களும் விதிக்கப்பட்டுள்ள தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று ஆளும் சமஸ்டி சபை தெரிவித்துள்ளது.
மோதல் சூழல் நிலவும் குறிப்பிட்ட நாட்டவர்கள் சுவிசில் மோதிக் கொள்வதை தடுப்பதற்கும், மோதல் பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதற்கு சுவிஸ் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும், சுவிற்சர்லாந்து அரசாங்கம் இந்த தடையை விதித்திருந்தது.
அல்பேனியா, அல்ஜீரியா, பொஸ்னியா - ஹெர்சகோவினா, கொசோவோ, மெசிடோனியா, சேர்பியா, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய நாட்டவர்களுக்கே ஆயுதங்களை வைத்திருக்க சுவிஸ் தடை விதித்துள்ளது.

ad

ad