புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2014


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் 
தமிழின் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின்.  கேரளாவை சேர்ந்த இவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். 
இவருக்கும், இசைக்கலைஞர் மாண்டலின் ராஜேசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில், மீராஜாஸ்மினுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகனின் பெயர், அனில்ஜான் டைட்டஸ். திருவனாந்தபுரத்தை சேர்ந்த டைட்டஸ்–சுகதகுமாரி தம்பதிகளின் மகன். துபாயில், ‘சாப்ட்வேர்’ என்ஜினீயராக இருக்கிறார்.

மீராஜாஸ்மின்–அனில்ஜான் டைட்டஸ் திருமணம், திருவனந்தபுரத்தில் உள்ள எல்.எம்.எஸ். கிறிஸ்தவ தேவாலயத்தில்  நேற்று காலை 11 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
முன்னதாக நேற்று மீரா ஜாஸ்மினுக்கும்- அனில் ஜான் டைட்டசுக்கும் கடந்த 9ந்தேதி பதிவு திருமணம் நடந்தது. பதிவு திருமணம் எர்ணாகுளம் சிலவனூரில் ந்டைபெற்றது. இதற்காக எர்ணாகுளம் சார்பதிவாளர் அனில் அவரது வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார்.நிகழ்ச்சியில் இரு வீட்டைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இதற்கிடையில் ஜான் டைட்சுக்கு ஒரு பெண் போனில் மிரட்டல் விடுத்து உள்ளார்.இதை தொடர்ந்து அனில் ஜான்டைட்டஸ் நேற்று கேரள உயர்நீதி மன்றத்தில் ஒருமனுதாக்கல் செய்தார். அதில் எனக்கும் நடிகை மீராஜாஸ்மினுக்கும் பிப்ரவரி 12-ந்தேதி சர்ச்சில் திருமணம் நடக்கிறது எனது மனைவி என கூறி பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்.


திருமணம் நடைபெறும் இடத்துக்கே வந்து தகராறு செய்வேன் என கூறுகிறார். எனவே எனது திரு மணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை ஏற்று திரு மணத்துக்கு பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து திருமணம் நடைபெறும் ஆலயத்தின் உள்ளேயும் வெளியேயும் போலீசார் பாதுகாப்பு அளித்து இருந்தனர்.

ad

ad