புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014

மலேசிய விமானம் இப்போது கொரியக்கப்பலா ?கொரிய கப்பல் விபத்து: 300 பேர் மாயம்
தென்கொரியாவில் நடுக்கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பலியானதுடன், சுமார் 300 பேர் காணாமல் போயியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்கொரியாவில் செவோல் என்ற பயணிகள் கப்பல் 477 பயணிகளுடன் இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டது.
இந்தக்கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், சியோல் புறநகர் அன்சானில் உள்ள டான்வோன் உயர் நிலைப்பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவார்கள்.
இவர்கள் 4 நாள் சுற்றுலாப்பயணமாக சென்றார்கள்.

இந்தக்கப்பல் தனது பயணத்தின் நடுவழியில் நேற்று சற்றும் எதிர்பாராத வகையில் மூழ்கத் தொடங்கியது. கப்பலில் இருந்தவர்கள் அலறினர். தவித்தனர். இதுதொடர்பாக உடனடியாக தென்கொரிய கடலோரக்காவல் படைக்கு சிக்னல் அனுப்பப்பட்டது.
சிக்னல் கிடைத்ததும் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையின் 100 கப்பல்களும், படகுகளும், 18 ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஆனால் அந்தக்கப்பல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதுமே, அது மூழ்கி விடும் என கருதி பல மாணவர்கள் உயிர் பிழைக்கும் ஆவலில் கடலில் குதித்தனர்.
மீட்பு படையினர் விரைந்த போதே, கிட்டத்தட்ட அந்தக்கப்பல் முழுமையாக மூழ்கும் நிலையில் இருந்தது. கப்பலில் இருந்து 368 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும், கப்பலின் பெண் சிப்பந்தி ஒருவர், மீட்கப்பட்ட மாணவர் ஒருவர் உள்பட 3 பேர் உயிர் இழந்து விட்டதாகவும் தென்கொரிய பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் கணக்கிட்டதில் தவறு ஏற்பட்டு விட்டதாகவும், 164 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சுமார் 300 பேர் காணாமல் போய்விட்டதாகவும் பின்னர் கூறப்பட்டது.
போர்க்கப்பல்களும், வணிகக்கப்பல்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இப்பணியில் உதவுவதற்காக அமெரிக்கா, போர்க்கப்பல் ஒன்றை அனுப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. 160 நீச்சல் வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூழ்கிய கப்பல் ஜப்பானில் கட்டப்பட்டது, 900 பேர்களை ஏற்றிச்செல்லும் வசதி கொண்டது, கார்களையும், லாரிகளையும் சுமந்து செல்லும் வசதியையும் கொண்டுள்ளது.

ad

ad