புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014

யாழ்.பல்கலையில் சூரியக் கலத்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுப்பட்டறை 
 சூரியக் கலத்தொழில் நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும் என்ற தலைப்பிலான ஆய்வுப்பட்டறை ஒன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இன்று ஆரம்பமாகியது.

 
 யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல் துறையின் ஏற்பாட்டில் 3 நாட்கள் கொண்டதாக இவ்   ஆய்வுப்பட்டறை இடம்பெறவுள்ளது.
 
இதில் இலினோயிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான பேராசிரியர்.சிவலிங்கம் சிவானந்தன் தலைமையில் விஞ்ஞானிகளான றிம் கூட்ஸ், றிம் கெசற், ரமேஸ் தேரே, மௌபாஃக் அல் ஜசீம் ஆகியோரே வளவாளர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.அவர்களோடு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பிரதித் தலைவர்,யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டனர்.
 
கருத்தரங்கின் நிறைவு தினத்தன்று யாழ். பல்கலைக்கழக பௌதீகத் துறையினரால் சூரியக் கலத் தொழில் நுட்பம் தொடர்பான செயல்முறை விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
 
 இலங்கையில் கற்மியம் ரெலுரைட் சூரியக் கலத் தொழில்நுட்பம் தொடர்பான செய்முறை ஆய்வு உபகரணங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாத்திரமே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad