புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014

பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம்-கேணல் ஹரிஹரன்
பாராளுமன்ற அனுமதி இல்லாமல் நிலைமையைப் பொறுத்து படைகளை அனுப்ப இந்தியப் பிரதமருக்கு அதிகாரம் இருப்பதாக இராணுவ ஆய்வாளரும், இந்திய
இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியுமான கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரில் இந்தியப் படையினர் நேரடியாகப் பங்கெடுத்தது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றை அமைக்கக் கோரி இந்திய உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுத் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், 

“நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, அல்லது சில நெருக்கடியான நிலைமைகளின் போது படைகளை அனுப்பும் அதிகாரம் பிரதமருக்கு உள்ளது. 

1989ல் மாலைதீவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்ட போது, அந்த நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தியப்படைகள் அங்கு அனுப்பப்பட்டன. 

சிறிலங்காவைப் பொறுத்தவரையில், 2008, 2009இற்கு முன்னரே நெடுங்காலமாக நெருக்கமான பாதுகாப்பு உறவுகள், குறிப்பாக கடற்படையுடனான உறவுகள் இந்தியாவுக்கு இருந்து வந்துள்ளன. 

அதைவிட போரின் இறுதிக்கட்டத்தில், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்தது. 

அப்போது இந்தியாவிடம் ஆயுதங்களை சிறிலங்கா கோரியது. 

அதற்கு போருக்குப் பயன்படும் ஆயுஙதங்களை வழங்க முடியாது என்று இந்தியா கூறிவிட்டது. 

எனினும், விமானத் தாக்குதலில் இருந்து தடுப்பதற்கான சில ஆயுதங்களையும், ரேடர்களையும் இந்தியா வழங்கியது. 

அவை போருக்குப் பயன்படாத ஆயுதங்கள் என்று இந்தியா கூறியது. 

பயிற்சி, ஆயுத உதவிகள் தவிர்ந்த, இந்தியப் படைகள் அங்கு நேரடியாகப் போரில் பங்கேற்றதாக  நான் அறியவில்லை. 

ஆனால், இந்திய நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி, படைகளை அனுப்பும் அதிகாரம் இந்தியப் பிரதமருக்கு உள்ளது. 

எனினும் பின்னர் அதுபற்றி நாடாளுமன்றத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். 

இந்தியாவினது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும் போது, அது உள்நாட்டிலாக இருந்தாலும், வெளிநாட்டிலாக இருந்தாலும், அதற்கெதிராக நடவடிக்கையில் இறங்க முடியும். 

விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையில் படைகளை ஈடுபடுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இருந்திருக்காது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad