புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014


யாழ்ப்பாண மாவட்டம் 3 நாடாளுமன்ற ஆசனங்களை இழக்க உள்ளத
யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை மூன்றினால் குறைக்கப்பட உள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாகும். எனினும், அடுத்த பொதுத் தேர்தலின் போது
இந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையும் குறைக்கப்பட உள்ளது.
எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கை ஏழகாக குறைவடையவுள்ளது. இதன்படி இரண்டு மாவட்டங்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கினால் குறைக்கப்பட உள்ளது.
இந்த எண்ணிக்கையானது நான்கு மாவட்டங்களில் அதிகரிக்கப்பட உள்ளது. நுவரெலியா மாவட்டம், மொனராகல, பதுளை மற்றும் இரத்தினபுரி அகிய மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தலா ஒவ்வொன்றினால் அதிகரிக்கப்பட உள்ளது.
மக்கள் சனத்தொகை மற்றும் 2013ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு என்பனவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து ஏற்கனவே அறிக்கப்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad