கனடாவின் நிலைப்பாடு பெரும் ஏமாற்றமளிக்கிறது
பொதுநலவாய அமைப்புக்கு இலங்கை தலைமை தாங்கவுள்ள அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும்
தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக பொதுநலவாய நிதியத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்துவதாக கனடா அரசாங்கம் அறிவித்துள்ள தீர்மானம் குறித்து கமலேஷ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- கனேடிய அரசாங்கம், அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பொதுநலவாய நிதியத்தினை இடைநிறுத்தப் போவதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கு அறிவித்துள்ளது.
பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பினை வழங்குவதே மேற்படி பரஸ்பர தன்னார்வு நிதியத்தின் நோக்கமாகும்.
கனேடிய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் ஏமாற்றம் அளித்துள்ள போதிலும், இவர்களுடைய பங்களிப்பு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான பொதுநலவாய நிதியத்தின் செயற்பாடுகளுக்காக கனடா நீண்டகாலமாக வழங்கி வந்த ஆதரவு, பெறுமதிமிக்கவையெனவும் அவர் நினைவு கூர்ந்தார்.
பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் மக்களின் நன்மை கருதி, எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும், ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள திட்ட வரைபுக்கமைவாக பொதுநலவாய அபிவிருத்தி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க அதன் உறுப்பு நாடுகள் கூட்டாக பங்களிப்பினை வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.