புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2014



தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருக்கும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சேலத்தில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
சேலம் நகருக்கு மாலை 5.10க்கு வந்த நரேந்திர மோடி, சேலம் பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த்
உள்ளிட்டோர் பேசினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, சேலத்தில் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், 60 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி நாட்டை பலவீனப் படுத்திவிட்டது. 60 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்து காட்டாத வளர்ச்சிப் பணிகளை 60 மாதங்களில் பாஜக செய்து காட்டும். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கைத்தொழிலைப் பாதுகாப்போம் என்று கூறியுள்ளோம்.
மேலும் விவசாயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.
சுகாதாரத் துறையில் இன்னும் இந்தியா முன்னேற்றம் காணவில்லை. நாட்டின் 75வது சுதந்திர தினத்துக்குள் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்படும் என்று உறுதி கூறுகிறேன்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் கடனை ரத்து செய்வதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது...
நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம். தமிழக மக்களுக்கு நதி நீர் கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.  நதிகள் இணைக்கப்பட்டால், தமிழகத்தில் நீர் தட்டுப்பாடு குறையும். நதிகளை இணைக்காத வரையில் தமிழகம் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படும். எனவே பாஜக கூட்டணி அரசு அமைந்ததும் நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
தமிழகத்தில் அடுத்து மிகவும் முக்கியத் தேவை மின்சாரம். தமிழகத்துக்குத் தேவையான மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
விஜயகாந்த், வைகோ, ராம்தாஸ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையின் கீழ் தமிழகத்தில் நிச்சயம் வளர்ச்சிப் பணிகளை சாத்தியமாக்குவோம்.
விஜயகாந்த், பிரேமலதா இருவரும் ஏழைகளைப் பற்றி அதிகம் சிந்திக்கின்றனர். அவர்கள் நாட்டின் ஏழைகளின் நாடித்துடிப்பை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழகத்துக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.
இந்தக் கூட்டணியால் நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்தக் கூட்டணி, நேஷனல் டெவலப்மெண்ட் அலையன்ஸ்... தேசிய வளர்ச்சி கூட்டணி என்று பேசினார் நரேந்திர மோடி.
இன்று மாலை 7.15க்கு கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார்.

ad

ad