புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஏப்., 2014தமிழகத்தில் அடுத்தவாரம் நரேந்திர மோடி - சோனியாகாந்தி போட்டி பிரசாரம்


தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வருகிற 24-ந்தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெற உள்ளது.

இன்னும் தமிழ் நாட்டில் அகில இந்திய தலைவ்ர்கள் பிரசாரம் செய்யவில்லை ஈதனால் பார்தீய ஜனதா காங்கிரஸ் தொண்ட்ர்கள் உற்சாகம் இன்றி காணபடுகின்றனர்
இந்த நிலையில் அடுத்தவாரம் முதல் அகில இந்திய தலைவர்கள் நரேந்திரமோடி, சோனியாகாந்திம் ராகுல்காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்ப்டுகிறது.
நரேந்திர மோடி
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக 6 இடங்களில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மோடி. சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதால் இரண்டுக்கும் பொதுவாக காரைக்குடியில் மோடியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜாவுக்காக பிரச்சாரம் செய்ய வருவதாக ஏற்கெனவே உறுதி கொடுத்திருக்கிறாராம் மோடி. இதே தினத்தில், தனது கூட்டணி தோழர் வைகோ-வுக்காக விருதுநகரிலும் மாநில பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்காக கன்னியாகுமரியிலும் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மோடி. இதேபோல் தேமுதிக சுதீஷுக்காக சேலத்திலும் அன்புமணிக்காக தருமபுரியிலும் முன்னாள் பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கோவையிலும் ஒரே நாளில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மோடி.
எனினும் முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் பிரச்சாரமா அல்லது வடமாவட்டங்களில் பிரச்சாரமா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோனியா- ராகுல் காந்தி
சோனியா வரும் 16-ந்தேதி கன்னியாகுமரி தொகுதிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து கூட்டத்தில் பேச உள்ளார்.
மீண்டும் 19-ந்தேதி சோனியா   புதுச்சேரிக்கு வந்து காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவு திரட்ட வுள்ளார். புதுச்சேரி யில் அவர்பேசும் இடத்தை தேர்வு செய்ய ஆலோசனை நடந்து வருகிறது.
சோனியாவை தொடர்ந்து அடுத்த வார இறுதியில் ராகுல் தமிழகம் வர உள்ளார். அனேகமாக 17-ந்தேதி முதல் 20-ந்தேதிக்குள் அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா 16-ந்தேதி வருவது உறுதியாகி விட்ட நிலையில் மோடியும் வரும் 15-ந்தேதி முதல் 20-ந் தேதிக்குள் அடுத்தடுத்து 2 தடவை வர உள்ளார்.