புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014


பிரச்சினையில் சிக்கிய முலாயம் சிங்; சி.டி. ஆதராங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது தேர்தல் கமிஷ்ன்

டெல்லியில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை அடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, மும்பை

சக்தி மில் கும்பல் கற்பழிப்பு வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அங்கு மொரதாபாத்தில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்” என பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில், “கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல. வாலிபர்கள் தவறு செய்கிறார்கள். மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்” என முலாயம் சிங் கூறியதாக தகவல் வெளியாகியது. முலாயம் சிங் யாதவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தனது கருத்தை முலாயம் சிங் யாதவ் நியாயப்படுத்தியுள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்தினால் முலாயம் சிங் யாதவ் புதிய பிரச்சினையில் சிக்கியுள்ளார். தேர்தல் கமிஷ்ன் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. தேர்தல் கமிஷ்ன் மொரதாபாத் பிரசார கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசியது தொடர்பான சி.டி.யை ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது.
"தலைமை தேர்தல் கமிஷ்ன் மொரதாபாத் பிரசார கூட்டத்தில் முலாயம் சிங் யாதவ் பேசியது தொடர்பான சி.டி.யை கேட்டுள்ளது. அதனை ஆய்வு செய்த பின்னர் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று உத்தரபிரதேச தேர்தல் அதிகாரி உமேஷ் சிங்கா கூறியுள்ளார்.

ad

ad