புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2014

பொதுபல சேனாவை கட்டியும் அவிழ்த்தும் விடும் அரசாங்கம்

 ஜெனீவா பிரேரணை நிறைவு பெறும் வரை முஸ்லிம் நாடுகளை தமது பொறுப்பில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வருட ஆரம்பத்தில் ராஜபக்ஷாக்கள் உணர்ந்திருந்தனர்.
பின்பு பாவனைக்கு எடுத்துக் கொள்ளும் நோக்கில் பொதுபலசேனாவினை குளிர்சாதனப் பெட்டியில் பத்திரமாக வைத்திருந்தனர். இதனால் நாட்டில் சமாதான நிலையொன்று காணப்படுவதுடன், ஒரு மாதத்துக்கும் மேலாக சப்தங்களும் ஓய்ந்திருந்தன. என்றாலும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினை தாக்கும் தேவை ஏற்பட்டபோது அச்சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷாக்களின் அந்த நாய் வேலைக்கு சுதந்திரக் கட்சியில் எவரையும் பயன்படுத்திக் கொள்வதற்கு முடியாத நிலையில் ராஜபக்ஷ சகோதர்கள் இந்த பொதுபலசேனாவினை மீண்டும் அவிழ்த்து விட்டனர்.
இத்தோடு,  ராஜபக்ஷாக்களின் மற்றொரு பணியும் இந்த பொதுபலசேனா தேரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அது ஹக்கீமை தாக்கும் பொறுப்பாகும். இதன்பின் ஜெனீவா பிரேரணைக்கு எதிராக புலிகள் பாணியில் பலாத்காரமான ஹர்த்தால் ஒன்றினை ஏற்பாடு செய்யும் பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுபலசேனா மீண்டும் தெருவுக்கு வந்துள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டு இன, மற்றும் மத ஒற்றுமையினை சீர்குலைக்கும் நீதிமன்றங்களை சுத்தப்படுத்துவது பற்றியும் பேசுகின்றனர். வெள்ளைக்காரர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட கொத்துரொட்டி சட்ட வரையறையாகவும் தற்போதைய சட்டங்கள் அமைந்துள்ளதென்றும் குறிப்பிடுகின்றனர். 
நன்றி – ராவய 
தமிழில் - ஸிராஜ் எம். சாஜஹான்   

ad

ad