புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

சரத்குமார் அதிமுகவில் சேரப்போகிறாரா? :சமகவினர் அதிருப்தி 
 திருவண்ணாமலை அதிமுக வேட்பாளர் வனரோஜாவை ஆதரித்து வாக்குகள் திரட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் இன்று மாலை 5 மணிக்கு திருவண்ணாமலை வந்தார்.

திமுக, பி.ஜே.பி பற்றி பேசியவர் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் பற்றி பேசும்போது, ’’என்னுடைய திரையுலக நண்பர் வாக்கு கேட்டு வருகிறார். அவர் என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. ஏதேதோ பேசுகிறார். மக்களோடு, தெய்வத்தோடு கூட்டணி என்றவர்,  இப்போது பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
குளோஸ் (காணாமல்) பண்ண வேண்டிய பாமக என்ற கட்சியுடன் விஜயகாந்த் க்ளோஸ்சாக (நட்பாக)  உள்ளார். அந்த இரண்டு கட்சியும் தேர்தலுக்கு பின் குளோஸ் ( காணாமல் ) ஆகிவிடும்’’ என சாடினார்.

பொதுமக்களுக்கு தொந்தரவு தராத வண்ணம் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். விதிமுறைகளை மீறினால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்கிறது சட்டம். ஆனால், காவல்துறை ஆளும் கட்சிக்கு ஒரு பார்வை, எதிர்கட்சிகளுக்கு ஒரு பார்வை என செயல்படுகிறது. ஆளும் கட்சி விதிமுறைகளை மீறினால் கண்டுக்கொள்ளாத காவல்துறை, எதிர்கட்சிகள் மீறினால் உடனே வழக்கு பதிவு செய்கிறது என்கின்றன எதிர்கட்சிகள். அதை நிரூபிப்பது போலவே செயல்படுகின்றன தேர்தல் ஆணையமும்.
திருவண்ணாமலைக்கு பிரச்சாரம் செய்ய வந்த சரத்குமாரின் பிரச்சார வாகனத்தோடு 20க்கும் மேற்பட்ட கார்கள் முன்பும், பின்பும் வந்தன. அதோடு பொதுமக்களுக்கு தொந்தரவு தராத வண்ணம் பிரச்சாரம் செய்யவேண்டும் என்ற விதிமுறையையும் மீறினர் ஆளும் கட்சியினர்.
அதேபோல், சரத்குமார் கட்சிக்கு என்று ஒரு கொடி  உள்ளது. கொடி கலரில் தோளில் போடும் துண்டும் உள்ளது. பிரச்சாரத்துக்கு வந்த நடிகர் சரத்குமார் தன் கட்சியின் கொடி கரையை கொண்ட தோள் துண்டு போடாமல் தன்னுடன் வேனில் இருந்த தொகுதி பொறுப்பாளர் கமலக்கண்ணன் தோளில் இருந்த அதிமுக துண்டு எடுத்து  போட்டுக்கொண்டு பிரச்சாரத்தை செய்தார். இது அவரது கட்சி தொண்டர்களை அதிருப்தியடைய வைத்தது.  கட்சியை கலைத்துவிட்டு அதிமுகவில் சேரப்போகிறாரா என அங்கே அவர்கள் முனுமுனுத்தனர்.

ad

ad