புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

விசேட பஸ், ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

தேவைக்கேற்ப சேவைகளை அதிகரிக்குமாறு ஆணைக்குழு பணிப்பு
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னி ட்டு இன்று முதல் விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகளை நடத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் சொந்த இடங்களுக்கு செல்வதற்காக விசேட தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தலைவர் ரொசான் குணவர்தன தெரிவித்தார்.
24 மணி நேரம் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சகல மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் தலா 100 பஸ்களை தயார் நிலையில் வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை. பண்டிகையையொட்டி கூடுதலான பஸ்களை தூரசேவையில் ஈடுபடுத்த இ,போ,ச நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளதோடு பண்டிகை நெருங்குகையில் கூடுதல் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இருப்பதாக இ. போ.ச கூறியது.
நாளை (9) முதல் விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதோடு கொழும்பிலிருந்து மாத்தறை, காலி, கண்டி, பதுளை உட்பட முக்கிய இடங்களுக்கு மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்த இருப்பதாக ரயில்வே திணைக்களம் கூறியது. இது தவிர ரயில்களின் பெட்டிகளின் அளவும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. விசேட ரயில் சேவைகள் 9 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படும்.
தனியார் பஸ் சேவைகள் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும். பண்டிகை முடிவடைந்து கொழும்பு திரும்புவதற்காக வும் விசேட போக்குவரத்து சேவைகள் நடத்தப்பட உள்ளன.

ad

ad