புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஏப்., 2014

ஐ.நா விசாரணைக்குழு முன் சாட்சியமளித்தால் சட்டநடவடிக்கை -அச்சுறுத்துகிறது சிறிலங்கா

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்கும் விசாரணைக்குழு முன்பாக சாட்சியமளிப்போருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தகவல் வெளியிடுகையில்,

“சாட்சியமளிக்கும் தனிநபர்கள் நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில், செயற்படுவது கண்டறியப்பட்டால் மட்டும், அவர்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விசாரணைக் குழு முன்பாக சாட்சியமளிக்கும் எவரேனும், சமர்ப்பிக்கும் சான்றுகள் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக இருந்தால், நாம் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.

அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாதென்று சிறிலங்கா உறுதியாக அறிவித்து விட்டது.

எந்வொரு விவகாரமும் உள்நாட்டு பொறிமுறைகளின் ஊடாகவே தீர்க்கப்பட வேண்டும் என்று அண்மையில் ஜெனிவாவில் நடந்த கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்திக் கூறியிருந்தது.

அனைத்துலக விசாரணைக்கு நாம் அனுமதி அளித்தால், அது நாட்டின் இறைமைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஐ.நா விசாரணைக் குழு முன்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாட்சியமளிக்க முடியாது.

ஏனென்றால், அவர்கள், நாட்டின் இறைமையை பாதுகாப்பதாக உறுதிப்பிரமாணம் எடுத்த பின்னரே, பதவியேற்றுள்ளனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அனைத்துலக விசாரணைக் குழு முன்பாக, சாட்சியமளிப்பது தேசத்துரோகம் என்றும், அவ்வாறு சாட்சியமளிப்பவர்களுக்கு எதிராக அரசாங்க இரகசிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad