9 ஏப்., 2014கோலிக்கு காதல் தூதுவிட்ட இங்கிலாந்து வீராங்கனை!

மும்பை: 'கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை ட்விட்டர் மூலம் காதல் அம்பை ஏவி உள்ளார்.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் 25 வயதான விராட் கோலியின் நளினமான பேட்டிங்கை பார்த்து காதல் வயப்பட்டுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான 22 வயது டேனியலி நிகோல் யாட். இவர் கோலி மீதான தனது ஆசையை வித்தியாசமாக வெளிப்படுத்தினார்.

தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில், ‘கோலி என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று கெஞ்சலாக தனது காதல் அம்பை ஏவி இருந்தார்.

இந்நிலையில், டேனியலின் விருப்பத்தை கோலியின் குடும்பத்தினர் மறைமுகமாக நிராகரித்துவிட்டனர். விராட் கோலியின் தாயார் சரோஜ் கூறுகையில், "விராட் கோலிக்கு இப்போது திருமணம் செய்துக்கொள்வதற்கு சரியான வயது கிடையாது. இன்னும் 4– 5 ஆண்டுகளுக்கு அவரது திருமணத்தை ப
ற்றி நினைக்கமாட்டோம். அவர் இப்போது தான் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். கிரிக்கெட் பயணத்தில் இன்னும் முன்னேற்றம் காண அவர் பேட்டிங்கில் தொடர்ந்து கவனம் செலுத்துவதே எங்களுக்கு முக்கியம்" என்றார்.

"காலம் கனியும் வரை விராட் கோலிக்காக அந்த வெளிநாட்டு மங்கை காத்திருக்க தயாராக இருந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?" என்று கேட்ட போது, "உங்களது யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதிக் கொள்ளுங்கள்" என்
று கோபமாக பதில் அளித்தார்.