புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014


நடிகை விந்தியா பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு :
விராலிமலையில் பரபரப்பு
   புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியில் வருகிறது. இந்த தொகுதியின் ச.ம உ. அ.தி.மு.க அமைச்சரும் மா.செ.வுமான விஜயபாஸ்கர்.
தொகுதி சிட்டிங் எம்.பி. அ.தி.மு.க. தம்பிதுரை.


   இப்போதும் தம்பிதுரையே அ.தி.மு.க வேட்பாளராக களத்தில் உள்ளார். விராலிமலை ச.ம. தொகுதிக்குள் அ.தி.மு.கவினர் எப்போது வாக்கு கேட்டு வந்தாலும் குடிதண்ணீர் கொடுக்காமல் ஓட்டு கேட்க வரக் கூடாது என்று பல முறை விரட்டப்பட்டனர். இதனால் கை கலப்பு காயம் ஏற்பட்டது.


   அதன் பிறகு மறுபடியும் தம்பிதுரையை அழைத்துக் கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டு கேட்டு போன போது பல கிராமங்களில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது. ஒரு கிராமத்தில் வேட்பாளர் மற்றும் அமைச்சர் அவருடன் வந்த அ.தி.மு.கவினரை அந்த கிராம மக்கள் நிறுத்தி வைத்து விடடனர். அதன் பிறகு விராலிமலை கிராமங்களில் வாக்கு கேட்பதை அ.தி.மு.க நிறுத்திக் கொண்டது.


   இந்த நிலையில் திங்கள் கிழமை இரவு நடிகை விந்தியா விராலிமலை சோதணைச்சாவடி அருகே நின்று பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அருகில் மா.செவும். அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் நின்று கொண்டிருந்தார். அப்போது தி.மு.க தலைவர் கலைஞரை தரக்குறைவாக பேசியதாக அப்பகுதியில் நின்ற சிலர் வாக்குவாதம் செய்துள்ளனர். அதன் பிறகும் அதே போல பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலர் பேசிக் கொண்டிருந்த விந்தியா மீது கல் வீசியுள்ளனர்.


   இதைப் பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூட்டத்தை நிறுத்திக் கொண்டு விந்தியாவை பாதுகாப்பாக இறக்கி அனுப்பியுள்ளார்.


   அந்த நேரம் சென்னையில் இருந்து என்ன பிரச்சணை என்று மா.செ வுக்கு போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். இதைக் கேட்டு கொதிப்படைந்த மா.செவும் அமைச்சருமான விஜயபாஸ்கர் அருகில் நின்ற பாதுகாப்பு அதிகாரியை அழைத்து உன்னை யார் சென்னை வரை சொல்ல சொன்னது. என்று ஏகமாக திட்டியதால் ஆத்திரடைந்த பாதுகாப்பு அதிகாரி அங்கிருந்து நடந்து சென்றுவிட்டார்.


    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad