புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014



,

பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது, கேரளா நரேந்திர மோடி குற்றச்சாட்டு

தீவிரவாதிகளின் புகலிடமாக கேரளா மாறிவிட்டது, பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஏ.கே.அந்தோணி செயல்பட்டார் என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானுக்கு ஆதரவு
கேரள மாநிலம் காசர்கோட்டில் பா.ஜனதா வேட்பாளர் சுரேந்திரனை ஆதரித்து பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது ராணுவத்தினரை பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி வந்து, தலையை துண்டித்து கொலை செய்தனர். இதுபற்றி பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக கூறினார். அது, நமது ராணுவத்தின் கருத்துக்கு முற்றிலும் முரணாக இருந்தது. அதனால் நமது ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். ஆனால், அந்தோணிக்கு பாகிஸ்தான் ஊடகங்கள் புகழாரம் சூட்டின.
பாதுகாப்பு துறையில் நிலவும் குளறுபடிகளுக்கு ஏ.கே.அந்தோணி பதில் அளிக்க வேண்டும். நமது ராணுவத்துக்கு போதிய ஆயுதங்களோ, தளவாடங்களோ இல்லை. நீர்மூழ்கி கப்பல்கள் விபத்துக்குள்ளானதால், கடற்படை தளபதி பதவி விலகினார். பாதுகாப்பு துறைக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்காததே இதற்கு காரணம்.
தீவிரவாதிகளின் புகலிடம்
சுற்றுலாவுக்காக, உலகம் முழுவதும் மக்களை கவர்ந்திழுக்கும் கேரளா, தற்போது தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது. படித்தவர்கள் அதிகம் நிறைந்த கேரளாவில்தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் 10 மாநிலங்கள் பட்டியலில், 6 மாநிலங்கள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் ஆகும். அதில் பா.ஜனதா ஆளும் மாநிலம் ஒன்றுகூட இல்லை.
கேரள கடல் பகுதியில், 2 மீனவர்களை இத்தாலி கப்பல் பாதுகாவலர்கள் சுட்டுக்கொன்றனர். அவர்கள் தற்போது எந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமரையும், ராணுவ மந்திரியையும், முதல்-மந்திரியையும் கேட்க விரும்புகிறேன்.
300 தாமரை மலர வேண்டும்
மத்தியில் தற்போது பலவீனமான அரசு நடக்கிறது. வலிமையான அரசு அமைய, 300-க்கும் மேற்பட்ட தாமரைகள் மலர வேண்டும். காங்கிரஸ் கட்சி, சில மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. பல மாநிலங்களில், ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி பெறும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பார்த்தால், 3 இலக்கத்தை கூட தொட்டு இருக்காது. அதாவது, 100-க்கும் குறைவான இடங்களைத்தான் பிடிக்கும்.
கேரளாவை காங்கிரஸ் கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இருவரும் ஒருவர் செய்த தவறுகளை மற்றவர் கண்டுகொள்வதில்லை. கேரளாவில் நட்புரீதியான பந்தயத்தில் மோதினாலும், டெல்லியில் கைகோர்த்து செயல்படுகிறார்கள். இடதுசாரி கொடிகளின் நிறம் சிவப்பு. காங்கிரஸ் கட்சியோ தர்பூசணி மாதிரி. வெளிப்புறத்தில் பச்சையாக இருக்கும். உள்ளே, சிவப்பாக இருக்கும். மேற்கண்ட இரு கட்சிகளின் ரகசிய உறவுக்கு இதுவே உதாரணம்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

ad

ad