புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஏப்., 2014

ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் முடிவை சிறிலங்கா அரசு மாற்றவேண்டும் - கோருகிறார் சம்பந்தன்

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்துலக விசாரணையை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ போவதில்லை என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவு, துரதிஸ்டவசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்குழு தமது அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டுக்குள் வரமுடியாது, என்றும், அதனுடன் அரசாங்கம் ஒத்துழைக்காது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா. சம்பந்தன்,

ஐ.நாவினால் மேற்கொள்ளப்படவுள்ள அனைத்துலக விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருப்பது நல்ல முடிவல்ல.

இந்தத் தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ad

ad