புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014

தொண்டன்,க . திருநாவுக்கரசு


தொண்டன்,க . திருநாவுக்கரசு    -   (சிவ-சந்திரபாலன் )

​​​​​​​​​​​​​​​ 
இந்த கட்டுரை சரியான ஒழுங்குபடுத்தல்களின் பின்னர் சீரமைக்கப்பட்டு முழுமையாக்கப்படும் அதுவரை  உங்கள் நுகர்வுக்காக திறந்துள்ளேன் -நன்றி

புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில்  பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.
சர்வோதயம் திருநா என்றும் திருநா அண்ணர் என்றும் அன்பாக அழைக்கபட்ட இவர் அரசியல் சமூகசேவை ஆன்மிகம் தமிழ்த்தொண்டு என அனைத்து துறைகளையும் தொட்டு சேவையாற்றினார்.

தனது இளவயதில் பெருங்காடு இளைஞர் கழகத்தை ஆரம்பித்து அதன் மூலம அந்த பகுதி மக்களுக்கு சேவை செய்தவர்  தனது பேச்சாற்றல் துணை கொண்டு அகில இலங்கை தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்டார் .நெடுந்தீவு முதல் அம்பாறை வரை தனது சிறந்த பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்து தமிழரசு கட்சியின் தூணாக விளங்கினார்.அக்கட்சியின் உயர்ந்த பதவிகளில் அலங்காரம் செய்தார்.ஒரு முறை இவருக்கான அனுபவம் திறமை காரணமாக கிடைக்கவிருந்த உயர் பதவி ஒன்று சில உள்நோக்கம் கொண்டோரால் தவறி போனது.இந்த காலகட்டத்தில் இவருக்கு உதயமான சிந்தனையின் அடிப்படையில்  கட்சி அரசியல் மண்ணுக்கு பெரிதாக உதவ முடியாத நிலை கண்டு அதனை விட்டு சர்வோதய அமைப்பில் இணைந்து கொண்டார் . அகில இலங்கை சர்வோதயத்தில் சேர்ந்து கொண்ட இவரால் சர்வோதயம் ஆலமரமென வட பகுதிஎங்கும்    பரவி விளுதுவிட்டது .இந்த அமைப்பின் ஊடாக பல வெளிநாடுகளுக்கு சென்று வெள்ளை இனத்தவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினார்.ஏராளமான வெளிநாட்டு உதவி நிறுவனங்களை எமது மண்ணுக்கு வரவழைத்து அதன் மூலம் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டார்.காலப்பகுதியில் சர்வோதய சிங்கள தலைமை செய்யும் சில வேறுபாடுகளை ( கட்டுரையின் பின்னே இந்த பிரிவின் காரணம் விளக்கபட்டுள்ளது ) உணர்ந்து தனியே வட இலங்கை சர்வோதயம் என்ற புதிய அமைப்பை நிறுவினார்.இதன் தலைமையகத்தை புங்குடுதீவில் அமைத்துக் கொண்டார்.

தமக்காக வாழாது மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்று தானே அவ்வாறு வாழ்ந்து காட்டியவர் திருநா அண்ணர். வாழ்நாள் முழுவதும் சுவாமி இராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் வழியில் தன்னை நெறிப்படுத்தி பகட்டான வாழ்வைத் துறந்து, பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்ததுடன் மக்கள்சேவையே மகேசன் சேவை எனத் தான் வாழ்ந்ததுடன் மட்டும் நின்றுவிடாது, தன் தாய், சகோதரியரையும் இணைத்துத் தன் குடும்பத்தையை தான் பிறந்த மண்ணுக்காக சர்வோதய வழியில் காந்தீய சிந்தனையுடன் உழைத்துவாழ வழிகாட்டிச் சென்றவர் அவர்.
அரசியல்ரீதியில், 1950களின் பின்னரும் 60களின் முற்பகுதிகளிலும் திருநா அண்ணரின் தமிழரசுக் கட்சியின்பாற்பட்ட ஈடுபாடு புங்குடுதீவில் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு வளர வாய்ப்பளித்தது. இவரது கருப்பு நிற 1306 என்ற இழக்க தகடு பொருத்திய A 40 ரக சிற்றூர்தி தமிழரசு கட்சிக்காக ஓடாத ஊரே இல்லை எனலாம் .அவரரது வாகன இலக்கமே எனது மிகசிறிய பருவ களத்தில் இருந்தே என் மனதில் பதிந்துள்ளது என்றால் அவர் அந்த வாகனத்தை எவ்வளவு பயன்படுத்தி இருப்பார் என்பதனை அறிய இதனை குறிப்பிட்டேன் . 1962 இல் புங்குடுதீவில் வீசிய புயல்காற்றின்போது தடைப்பட்டிருந்த பாதைப் போக்குவரத்தை சீர்செய்ய தனிமனிதனாகப் புறப்பட்டு இளைஞர்களையும் இணைத்து சிரமதானப்பணிகளில் ஈடுபட்டதும், தீவகத்துக் குளங்களை சீர்செய்து மழைநீரைச் சேகரித்து அந்த மண்ணுக்கு நல்ல நீர் வளம் சேர்க்கத் தனிமனிதனாகப் பணியாற்றியதும், அரசாங்கத்தையே நம்பியிராது நாமே நமது கிராமத்தை சுயதேவைப் பூர்த்திசெய்யும் ஒரு காந்தீயக் கிராமமாக வளர்த்தெடுப்போம் என்ற நம்பிக்கையை இளைஞர் மத்தியில் கொண்டு சேர்த்தவர். முதலாளித்துவ, வர்த்தக சிந்தனையில் ஊறித்திளைத்திருந்த தீவகத்து மனிதர்களில் மனமாற்றத்தை ஏற்படுத்தி அவர்களை சமூகநலன்விரும்பிகளாக மாற்றலாம் என்று இறுதிவரை நம்பியிருந்தார்.
தீவுப்பகுதி மக்கள் பஞ்சத்தில் வாடியபோது தனது தாயின் தங்கச் சங்கிலியை விற்று அதனைப் பணமாக்கி அதன்மூலம் மரவள்ளிக்கிழங்கு வாங்கி கஞ்சியூற்றிய செயற்பாடு இளம் வயதிலேயே இவரது சமூகம் பற்றிய இறுக்கமான பிணைப்புக்கு உதாரணமாகின்றது. 

சர்வோதயம் நிதிவளம்மிக்கதொரு அமைப்பாக என்றமே இருந்ததில்லை. ஒவ்வொரு திட்டத்தையும் முன்வைக்கும்போது அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி எனது மனதில் சஞ்சலம் தோன்றும். அப்போதெல்லாம் திருநா அண்ணர் கூறும் நம்பிக்கை வாசகம் இன்றளவும் ஏனோ என்னால் மறக்கமுடியாதுள்ளது. “உங்கள் பணி சுயநலநோக்கற்றதாக, சமூகத்துக்குத் தேவையானதாக நீங்கள் பூரணமாக நம்பினால் துணிந்து வேலையைத் தொடங்குங்கள்.
கடவுள் காசை எப்படியும் அனுப்பிவைப்பார்.” இத்தகைய துணிச்சலையும் நம்பிக்கையையும் எனக்கு திருநா அண்ணருக்குப் பின்னர் இன்றுவரை வேறு எவருமே தந்ததில்லை. புதிய நூல்தேட்டம் தொகுதியொன்றைப் பதிவுக்காகத் தொடங்கும் ஒவ்வொரு தடவையும் பணத்துக்காக நான் தடுமாறும் போதெல்லாம் திருநா அண்ணரின் அந்த நம்பிக்கையூட்டும் வாசகங்களே என் மனதில் தவறாமல் வந்துசெல்கின்றன. நூல்தேட்டத்தின் ஆறாவது தொகுதியின் தொகுப்புப் பணியில் நிற்கும் என்னை எறத்தாழ பதினைந்து தொகுதிகள் வரையாவது இந்த வாசகமே இழுத்துச்செல்லும் என்று நம்புகின்றேன்.
பாடசாலைக் கல்வியை முறையாகக்கற்று முடித்திராத அவரது வாழ்வை நெறிப்படுத்தியது யாழ்ப்பாண பொது நூலகமே என்று அடிக்கடி எனக்குக் கூறிவந்த அவரின் மனதில் நூலகம்- நூலகர் பற்றிய கருத்துநிலை ஒரு பக்தியாகவே உருவெடுத்திருந்தது. அமரர் வே.இ.பாக்கியநாதன் யாழ்ப்பாண நூலகத்தின் நூலகராகப் பதவியேற்றிருந்த அறுபதுகளின் இறுதிகளில் யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் அன்றாட வாசகராக இவர் இருந்துள்ளார். அங்கிருந்த திராவிடர் கழகத்தினதும், குறிப்பாக அறிஞர் அண்ணா, பெரியார், பாரதிதாசன் போன்றோரின் ஆரம்பகால நூல்கள் அவருடைய அறிவுப்பசிக்குத் தீனியிட்டிருந்தன. பின்னாளில் மிகச்சிறந்த மேடைப்பேச்சாளராகவும், சிந்தனாவாதியாகவும் அவரை எம்மிடையே வலம்வரச்செய்தது யாழ்ப்பாணப் பொது நூலகம் அவருக்கு ஊட்டிய தமிழே என்றால் அது மிகையாகாது. அதன் காரணமாகவே நூலகங்களின்பால் அவருக்கு அதீத பக்தி காணப்பட்டது.
நூலகத்தைக் கோவிலாகவும், அதன் நூலகரை அந்தணராகவும் கண்டு போற்றும் அவரது பெரும்பண்பை இன்றுவரை வேறு எவரிடமும் நான் காணவில்லை. 
வடமாகாண சர்வோதய இயக்கம், கலாநிதி ஆரியரத்னாவின் இலங்கை சர்வோதய சிரமதானச் சங்கத்துடன் இணைந்து அதன் வடமாகாண பிராந்திய அலுவலகமாக இணைந்திருந்த ஒருகாலகட்டத்தில் கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னாவுடன் கருத்துவேறுபாடுகள் முகிழ்த்தெழத் தொடங்கிய வேளை அது. 1983 இனக்கலவரம் வெடித்த காலகட்டமும் அதுவே. தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் உறவுகளை, உடமைகளை இழந்து குடும்பம் குடும்பமாக காங்கெசன்துறையில் கப்பலில் தரையிறக்கப்படுகிறார்கள். அவர்களுடைய நலன்பேணும்வகையில் ஒரு மண்டபத்தை சர்வோதயம் நடத்தியது. அக்காலகட்டத்தில் தரையிறங்கும் அகதிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்க சர்வதேச அமைப்பொன்று மொரட்டுவை சர்வோதயத்; தலைமையகத்திற்கு ஏராளமான நிதியுதவியை வழங்கியிருந்தது. அதைப் பயன்படுத்தி தென்னிலங்கையிலிருந்து தேங்காய், மரக்கறி, டின்மீன், பருப்பு வகைகளை யாழ்ப்பாணத்துக்கு நேரில் கப்பலில் அனுப்ப அரியரத்தினா ஒழுங்கசெய்திருந்தார்.
இனக்கலவரத்தால் முற்றாகப் பாதிக்கப்பட்ட வடஇலங்கை – தென்பகுதிப் போக்குவரத்து, ஏற்றுமதிக்கான மீன் மற்றும் விவசாயிகளின் விளைபொருட்களை வடபகுதிகளிலேயெ முடக்கிவிட்டது. உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகாது உற்பத்தி விலையில் கூட அவற்றை உள்ளுர் சந்தைகளில் விற்கமுடியாது தமிழ் விவசாயிகளும், மீனவர்களும் திண்டாடிய வேளையில், யாழ்ப்பாணத்துக்கு கப்பலில் உணவுப்பொருட்களை ஆரியரத்னா குழவினர் அனுப்பமுயற்சிசெய்வதை திருநா அண்ணர் முற்றாக எதிர்த்தார். பாதிக்கப்பட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களிடமே மரக்கறி மீன் வகைகளை கொள்வனவு செய்தால் அனைவருக்கும் நன்மையாகும் எனத் தலைமையகத்திற்கு விளக்கமுனைந்தார். அரசியல் லாபமீட்ட விரம்பிய ஆரியரட்னா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
திருநா அண்ணர் இந்த நிராகரிப்பால் பொரிதும் மனமொடிந்திருந்தார். தமது மக்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பை தலைமைத்துவம் மறுத்து தென்னிலங்கையிலிருந்த தேங்காய் முதல் அனைத்துப் பொருட்களையும் அனுப்பியது எவ்வகையிலும் நியாயமாகப்படவில்லை. கண் கலங்கி வருந்திய அவரது மன உளைச்சலை என்னால் நேரில் கண்டு கலங்கத்தான் முடிந்தது. காலக்கரமத்தில் இந்த விரிசல் வடமாகாண சர்வாதயம் தனித்தியங்கும் அளவுக்கு பெரிதாகியது. திருநா அண்ணரின் ஆழமான தாயகப்பற்றை இச்சம்பவம் எனக்கு வெளிக்காட்டியிருந்தது.
ஒரு தடவை அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா ஜனாதிபதி தேர்தல் காரணமாக யாழ்;ப்பாணம் வந்திருந்தார். சர்வோதய அமைப்பின் இணைப்பாளர் என்ற பெயரில் திருநா அண்ணரைத் தான் சந்திக்க விரும்புவதாக தனிப்பட்ட அழைப்பொன்றினை ஊர்காவற்றுரை பொலிஸ் அதிகாரியின் வாயிலாக அனுப்பியிருந்தார். ஜே.ஆர்.அப்போது “யுத்தமென்றால் யுத்தம் சமாதானமென்றால் சமாதானம்” என்று சூழுரைத்து தமிழ்மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்திருந்த காலகட்டம்.
அவரைச் சந்திக்க விரும்பாத திருநா அண்ணரை காவல்துறையினர் தாமே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று ஜனாதிபதியைச் சந்திக்கவைத்திருந்தனர். ஜே.ஆர். திருநா அண்ணரை வரவேற்று, உங்களுக்கு நான் என்ன வகையில் உதவி செய்யவேண்டும்? என்று கேட்டாராம். அதற்கு திருநா அண்ணர் “நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். அதைத் தவிர நான் உங்களிடம் எதைக் கேட்பது?” என்று நெற்றியடியாகப் பதில் சொல்லிவிட்டு வந்தாராம். இதை மறுநாள் நான் திருநா அண்ணரைச் சந்தித்தபோது சாவதானமாக எனக்குக் கூறிச் சிரித்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வந்த சுவட்டையே அன்று அவரது செயலிலும் சிந்தையிலும் என்னால் காணமுடியவில்லை.
திருநா அண்ணரின் தியாக சிந்தையும் துணிச்சலும், உறுதியும் இணைந்த நேர்மையான செயற்பாடும் அவரை யாழ்ப்பாண மண்ணில் ஒரு தொண்டரடிப்படையிலான நிறுவனத்தை உருவாக்கி, சிக்கலான போர்க்காலச் சூழ்நிலையிலும், தடம் பிறழாது அதை வழிநடத்தும் வல்லமையைக் கொடுத்திருக்கிறது. 03.10.2001இல் திருநா அண்ணர் அமரத்துவம் அடைந்தபின்னர் அவர்வழிநின்று அமைப்பினை இன்று இக்கட்டான அரசியல், பொருளாதார, போர்க்கால இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் முன்னெடுத்துச்செல்லும் சர்வோதயச் சகோதரி ஜமுனாவின் தலைமைத்துவச் செயற்பாடுகளும் திருநா அண்ணரின் வழிகாட்டலால் செதுக்கி உரமேற்றப்பட்ட தூயசிந்தனைவழிப்பட்டவையாகவே உள்ளன. அதனாலேயே திருநா அண்ணரின் பாதையில் சர்வோதய இயக்கத்தை யுத்தகால சூழலிலும் நிலைகுலையாமல் நம்பிக்கையுடன் வழிநடத்திச்செல்ல இவர்களால் முடிந்துள்ளது.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். என்னளவில் சர்வோதய அமைப்பும் ஒரு திறந்த பல்கலைக்கழகம் தான். அங்கு உருவான பலர் சமூகவாழ்வில் சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் நினைவுகூர்ந்துகொள்கின்றேன.
தமிழ் மண்ணில் வறுமையின் பிரபுக்களாகவே பார்க்கப்பட்டுவருகின்ற செல்வம் கொழிக்கும் சர்வதேச சமூக சேவை அமைப்புகளிடையே வித்தியாசமானதொரு மண்பற்றுக்கொண்ட உள்ளுர் அமைப்பொன்றாக வடபகுதிச் சர்வோதயம் தனித்துவமான பாதையில் பயணிக்கின்றது. அதை இயக்கும் கரங்களை வலுப்படுத்த வேண்டியது உலகெங்கும் பரந்துவாழும் தீவகத்து மக்களின் பணியாகும். “பாதைகளை நாம் உருவாக்குவோம். பாதைகளில் நாம் உருவாகுவோம்” என்பது சர்வோதயப் பணியாளர்களின் வேதமாகும்.
இன்னும் வளரும் 



பின்னிணைப்பு தமிழ்மண்ணில் ஒரு சிரமதான அமைப்பு – என்.செல்வராஜா

----------------------------------------------------------------------------------------------------------------------


சர்வோதயம் பற்றிய ஒரு உள்மனப் பதிவு
ஈழத்தின் சமூகவியலாளர் சாந்தி சச்சிதானந்தன் எழுதிய வறுமையின் பிரபுக்கள் என்ற ஒரு நூலை அண்மையில் வாசித்தேன். டுழசனள ழக Pழஎநசவல என்ற பெயரில்; புசயாயஅ ர்யnஉழஉம எழுதிய ஆங்கில நூலின் தலைப்பிலிருந்து சாந்தி சச்சிதானந்தன் தனது நூலுக்கான தலைப்பை உபயோகப்;படுத்தியிருக்கின்றார். தனது நூலில் புசயாயஅ ர்யnஉழஉம ;, அபிவிருத்தி நிறுவனங்களில் பணிபுரிபவர்களை வறுமையின் பிரபுக்கள் என்று குறிப்பிடுகின்றார். வறுமையின் பெயரால் தாம் வாழும் பிரபுத்துவ வாழ்க்கையை குறிப்பிடுவதற்காகவே அவர் அவ்வாறு குறிப்பிடுகின்றார். தாயகத்தில் இன்றுள்ள நிலையும் அவ்வாறுள்ளதையே சாந்தியும் தன் வறுமையின் பிரபுக்கள் என்ற நூலின் வாயிலாக வெளிக்கொண்டுவர முனைந்துள்ளார்.
அங்குள்ள பன்னாட்டு அபிவிருத்தி நிறுவனங்கள், சர்வதேச நிதிக்கொடை அமைப்புக்கள் போன்ற நிறுவனங்களின் வரையறையற்ற நிர்வாகச் செலவீனங்கள், வீண்விரயங்கள் என்பன போக எஞ்சிய கொஞ்சநஞ்ச வளங்களே தாயக மக்களுக்குப் போய்ச்சேரும்; அவலத்தை இந்நூலில் துல்லியமாக அறியக்கூடியதாக உள்ளது. வறியவர்களுக்கெனப் பெறப்படும் நிதிகள் அனாவசியமாக பெரிய அலுவலகங்களுக்கும், அவர்களின் சொகுசு வாழ்க்கைக்கான குளிரூட்டிகளைச் செயற்;படுத்துவதற்கும், ஒரு லாயம் கொள்ளக்கூடிய வாகன வசதிகளுக்கும் பெருமளவிலான உள்ளுர் அலுவலர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் செலவழிக்கப்படுவதை தாயகத்தில் அன்றாட இயல்புநிலையில் காணக்கூடியதாயுள்ளது.
இந்த அநியாயமான, ஒழுங்கற்ற நடைமுறையினை விடுத்து, தாயகத்தில் கவனிக்கப்படாது ஒதுக்கப்பட்ட பிரதேசத்து மக்;களினதும் வறியவர்களினதும் பெயராலேயே, அவர்கள் சார்பிலேயே அவர்களின் வாழ்வுக்காகவே நாம் பணிபுரிகின்றோம் என்ற உணர்வும் பணிவும் இத்தகைய அபிவிருத்தி நிறுவனங்களில் வேலைசெய்பவர்களுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்பாகும் என்று வறுமையின் பிரபுக்கள் இடித்துரைக்கின்றது. அந்த நூலின் உள்வாங்கலின் பாதிப்பிலிருந்து நீங்கும் முன்னதாக 

ad

ad