புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014


சூடு பிடிக்கிறது ஒன்றாரியோவில் தேர்தல் பிரச்சாரம்

1297389105385_ORIGINAL
ஒன்றாரியோ மாகாணத்தில் உத்தியோகபூர்வமாகத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கத்லீனால் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டவுடன் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆங்காங்கே ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. யூன் மாதம் 12ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்சமயம் உத்தியோகபூர்வமாக
ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக் கனடியன் பிறஸ் என அழைக்கப்படுகின்ற செய்தித் தாபனமானது தகவல் வெளியிட்டுள்ளது.
ஒன்றாரியோவில் 3 முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் கடந்த கிழமையிலிருந்து பிரச்சாரத்
தை ஆரம்பித்திருக்கின்றார்கள்

கத்லீன் கிச்சினர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது லிபரலுக்கு சாத்திக் கூறுகள் அதிகமாகவுள்ளன எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் கத்லீன் குறிப்பிடுகையில் கொன்சவேட்டிவ் கட்சியினது போக்கிலிருந்து போக்குவரத்து எவ்வளவு முக்கியமானது என்பதை அவர்கள் விழங்கிக்கொள்ளவில்லையெனத் தெரியவருகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு லிபரல் ரொறன்ரோவின் பொருளாதார வளர்ச்சியைக் குறித்த திட்டங்களை லிபரல் வைத்திருக்கின்றது எனப் பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்திருக்கின்றார்.
Progressive Conservative கட்சியின் தலைவரான Tim Hudak மிசசாக்காவிலுள்ள பல தொழில் நிறுவனங்களுக்கு விஜயம் செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. Tim Hudak மிசசாக்காவில் பத்திரிகை நிருபர்களிடம் தான் ஒன்றாரியோவில் பணியாற்றுவதற்கான திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார் எனத் தெரியவருகிறது.
இவற்றைத் தெடார்ந்து மற்றைய இரு தலைவர்களும் தாம் தமது தனிப்பட்ட விருப்பு சம்பந்தமாகப் போட்டியிட முன்வந்ததாத் தெரிவித்திருக்கின்றார்கள்.
NDP கட்சியினது தலைவரான Andrea Horwath ரொறன்ரோ குயின்ஸ் பாக்கிலும், ஆகிய இரு இடங்களில் நிகழ்வுகளை நடாத்தியிருக்கின்றார் எனத் தெரிகிறது. அத்துடன் இன்று Nigara Falls ல் மாலை 3:30க்கு நிகழ்வ ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது எனத் தெரியவருகிறது. அத்துடன் பேசுகையில் தான் தொழில் மற்றும் நிதி விடையங்கள் பற்றிய சம்பவங்களில் பாதிக்கப்படுகின்ற ஒன்றாரியோ குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவம் தெரிவித்திருக்கின்றார்.

ad

ad