புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014

2014-05-10

சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு


EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும்
ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதில் ஏராளமான சுரங்கங்கள் சரிந்து அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் சிக்கி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மண்ணிற்குள்ளேயே சமாதியாகினர். இவர்களை தேடிய அரசு ஒருகட்டத்தில் அனைவரும் இறந்து விட்டதாகவே கருதியது. இந்நிலையில் செங் வாய் (59) என்ற தொழிலாளி உயிருடன் இருப்பது சில தினங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது. சுமார் 17 வருடங்களாக மூடப்பட்ட சுரங்கம் ஒன்றின் உள்ளே தனிமையில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருடன் பணிபுரிந்த 78 பேர் இவரது கண்ணெதிரிலேயே மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

தனிமையில் தவித்த செங் வாய் அங்கேயே 78 பேருக்கும் முறைப்படியான இறுதி சடங்குகளை செய்து உடல்களை மண்ணில் புதைத்தார். சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் விபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்கள் பயன்படுத்துவதற்கான அரிசி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை செங் வாய் பயன்படுத்திக் கொண்டார். மேலும் அங்கு வரும் எலிகளை பிடித்து தின்றும், சுரங்கத்தில் வளரும் ஒருவகை பாசி செடிகளை சாப்பிட்டும் தனது உயிரை கையில் பிடித்து காலத்தை கடத்தி வந்தார். எப்படியும் மீட்பு படையினர் தன்னை மீட்டு விடுவர் என்று நம்பினார். இப்படியே சுமார் 17 ஆண்டுகள் கடந்தன. இதனால் தனிமையில் அவர் உடல் நலிந்தும், மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட அவரை சில தினங்களுக்கு முன்பு சுரங்க ஆய்வாளர்கள் உயிருடன் மீட்டனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 17 ஆண்டுகளுக்கு பிறகு சுரங்க தொழிலாளி மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது கின்னஸ் சாதனையாகவும் கருதப்படுகிறது. இதற்கு முன்பு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜியோ ஸ்மித் என்பவர் தனது நிலத்தடி உணவகத்திற்குள் 142 நாட்கள் தனிமையில் இருந்ததுதான் மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad